கார்த்திக்கு முன்பே அறிமுகமான சூர்யா.. மீண்டும் தூசி தட்டிய லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். மிகக்குறுகிய காலத்திலேயே விஜய், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

இவர் இயக்கிய அனைத்து படங்களும் சாதாரண வெற்றி இல்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்து வருகிறது. விக்ரம் படம் ஒரு வாரங்களைக் கடந்த நிலையில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யா 5 நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தார். அவர் நடித்திருந்த அந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான தொடக்கமாக அமைந்திருந்தது. இந்நிலையில் சூர்யாவின் தம்பி கார்த்தியின் கைதி படத்தை இயக்கியிருந்தார்.

அதனால் கார்த்தியின் மூலம் தான் சூர்யாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக பேச்சுக்கள் அடிபட்டுவருகிறது. ஆனால் கைதி படத்திற்கு முன்பே லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்த இரும்புக்கை மாயாவி படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். அப்படத்தின் போஸ்டர்கள் கூட வெளியாகியிருந்தது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் அப்போது மாநகரம் படத்தை மட்டுமே இயக்கி இருந்ததால் இரும்புக்கை மாயாவி படத்தை இயக்க தனக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். இதனால் லோகேஷ் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மிக விரைவில் இரும்புக்கை மாயாவி படம் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கண்டிப்பாக இரும்புக்கை மாயாவி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி வித்தியாசமான முயற்சியில் லோகேஷ் எடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.