அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 169 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் சில கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் சூப்பர் ஸ்டாரை அவர் இயக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தலைவர் 169 தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் இன்று காலை 11 மணி அளவில் வெளிவரும் என்று சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்து இருந்தது. இதனால் காலை முதலே சோசியல் மீடியா சற்று பரபரப்பாகவே இருந்தது. மேலும் எப்பொழுது அப்டேட் வரும் என்று ரஜினியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
தற்போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. தலைவர் 169 திரைப்படத்தின் டைட்டில் ஜெயிலர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல நாட்களாகவே இந்த படத்திற்கு இதுதான் தலைப்பு என்று பல வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பெரிய கத்தி ஒன்று ரத்தம் சொட்ட சொட்ட இருப்பது போன்ற புகைப்படத்துடன் இந்த தலைப்பு வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் படத்தில் படு மிரட்டலான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குற்ற சம்பவங்களை பின்னணியாக கொண்ட ஒரு கதையாகத்தான் இருக்கும் என்று தற்போது ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். அட்டகாசமாக வெளியாகியிருக்கும் இந்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.