லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கியதிலிருந்து மாபெரும் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அந்தவகையில் கார்த்தியை வைத்து கைதி படம் இயக்கியிருந்தார். கார்த்தி நடித்த படங்களிலேயே கைதி படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார். இப்படமும் விஜய்யின் சினிமா கேரியரிலேயே அதிக வசூல் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது உலக நாயகனை வைத்து லோகேஷ் இயக்கியிருக்கும் விக்ரம் படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.
மேலும் இத்தனை ஆண்டு காலம் கமல் திரைவாழ்க்கையில் இருந்தாலும் அவரின் அனைத்துப் படங்களின் வசூல் சாதனையையும் விக்ரம் படம் முறியடித்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு பெரிய நடிகர்களுக்கும் லோகேஷ் தொடர்ந்து மாஸ் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தின் சக்சஸ் மீட் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பாலிவுட், டோலிவுட் என சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சக்சஸ் மீட்டில் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தமிழில் பல நடிகர்கள் லோகேஷ் படத்தில் நடிக்க காத்திருக்கின்றனர்.
ஆனால் லோகேஷ் தற்போது சிரஞ்சீவி, பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் போன்றவர்களை குறிவைத்து கதை யோசித்து வருகிறாராம். தளபதி 67 படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் அல்லு அர்ஜூனின் படத்தை இயக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு மிக குறுகிய காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் தமிழ் நடிகர்களை மதிக்காமல் இவ்வாறு அக்கட தேசத்து நடிகர்களை வைத்து படம் இயக்க லோகேஷ் ஆசைப்படக் கூடாது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.