விக்ரம் படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவருடைய வளர்ச்சி ஒவ்வொரு படத்திற்கும் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. லோகேஷ் இயக்கத்தில் முதல் முறையாக மாநகரம் படம் வெளியாகி ஹிட்டானது.
இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம்தான் கைதி. இப்படம் அதிரிபுதிரி ஹிட் ஆக அடுத்ததாக வந்தது தளபதியின் மாஸ்டர் படம். விஜய்யின் திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் இதே கூட்டணியில் தளபதி 67 படம் உருவாகயுள்ளது.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் படம் விக்ரம். கமலின் அசுர நடிப்புக்கு சரியான தீனி போட்ட படமாக விக்ரம் படம் அமைந்திருந்தது. இதுவரை கமலின் படங்கள் இந்த அளவுக்கு எந்த படமும் வசூல் செய்தது இல்லை.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படத்தை பார்த்துவிட்டு உடனே ஃபோன் செய்து வாழ்த்து கூறியுள்ளார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதாவது லோகேஷ் அவ்வளவு பரிட்சயம் இல்லாத மாநகரம் படத்தை இயக்கும்போது ரஜினிகாந்த் ஃபோன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அனைத்து படங்களை பார்த்த உடனே தனது கருத்துக்களை கூறி சூப்பர் கண்ணா, லவ் யூ கண்ணா என ரஜினிக்கே உண்டான ஸ்டைலில் வாழ்த்துக்களை அள்ளித் தெளித்தாராம். மேலும் பேசிய லோகேஷ் சூப்பர் ஸ்டாருக்கு நான் எவ்வளவு நன்றி பத்தாது எனக்கூறினார்.
இந்நிலையில் உலக நாயகனுக்கு ஒரு கிளாஸ் ஆன படத்தை கொடுத்த லோகேஷ் சூப்பர் ஸ்டாரை வைத்து எப்போது இயக்கயுள்ளார் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். கண்டிப்பாக ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் படம் உருவாகினால் 100% வெற்றி என்பது உறுதி. இந்த ஒரு நிகழ்வுக்காக தலைவர் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.