திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே.. அம்மணிக்கு அடித்த ஜாக்பாட்

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இதைத்தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் பாடல்களில் பூஜாவின் நடனம் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து ராம் சரணுக்கு ஜோடியாக ஆச்சர்யா படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதை தொடர்ந்த பிரபாஸுடன் இணைந்த ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருந்தார். இப்படமும் தோல்வியையே சந்தித்தது.

இதனால் தொடர் தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வரும் பூஜாவின் மார்க்கெட் குறையும் என எதிர்பார்த்த நிலையில் அவருடைய சம்பளத்தை உயர்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அம்மணிக்கு கிடைத்துள்ளது.

அதாவது சூர்யாவுக்கு ஜோடியாக தான் தற்போது பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். பாலா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 41வது படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கயுள்ளார்.

இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

- Advertisement -

Trending News