எழுத்தாளர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் தற்போது இயக்குனர் மணிரத்தினம் அவர்களால் படமாக்கப்பட்டுள்ளது. சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றின் நிகழ்வுகளை குறிப்பிடும் இந்த கதையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த படம் கோலிவுட் திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும். தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த இந்த பொன்னியின் செல்வன் கதையை படமாக்குவதற்கு பலரும் முயற்சி செய்தனர்.
அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தார். ஆனாலும் அந்த முயற்சி கைகூடவில்லை. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து மணிரத்னம் அதை செயல்படுத்தி காட்டி இருக்கிறார். அந்த வகையில் ரசிகர்கள் ரசித்த இந்த நாவலை திரையில் காண்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இப்படி இந்த படம் குறித்து வேறு பக்கம் எதிர்பார்ப்பு இருந்தாலும், மறுபக்கம் ஏகப்பட்ட சர்ச்சைகளும் கிளம்பி வருகிறது. அவை அனைத்திற்கும் படக்குழு சரியான விளக்கமும் அளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பொன்னியின் செல்வன் குறித்து சில சச்சையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது இந்த பொன்னியின் செல்வன் வரலாற்று கதை கிடையாது என்றும், இது முழுக்க முழுக்க கற்பனையான கதை தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராஜராஜ சோழன் தான் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி தான் பொன்னியின் செல்வன் நாவலும் எழுதப்பட்டது.
அதில் கல்கி சிறு சிறு கற்பனைகளை இணைத்து எழுதியிருந்தாரே தவிர அவை முழுவதும் கற்பனை கதாபாத்திரங்களோ அல்லது கதையோ கிடையாது. தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளே அதற்கான ஆதாரங்கள். அந்த கல்வெட்டுகளில் வந்திய தேவன், ராஜராஜ சோழன் உள்ளிட்ட பலர் பற்றிய குறிப்புகளும் இருக்கிறது.
அவற்றையெல்லாம் ஆராய்ந்து தான் சிறு கற்பனையை புனைந்து கல்கி இந்த நாவலை எழுதியிருக்கிறார். அப்படி இருக்கும் போது பயில்வான் அது வெறும் கற்பனை கதை மட்டுமே என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இதன் மூலம் அவர் எதைப் பற்றியும் ஆராயாமல் காதில் கேட்டதை வைத்து எதையோ உளருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.