இந்த ஆண்டு வசூல் வேட்டை ஆடிய டாப் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விரட்டிப் பிடிக்கும் பொன்னியின் செல்வன்

2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படம் வெளியாகி உள்ளது. இதில் அதிக வசூல் செய்து முதல் 5 இடங்களை பிடித்த படங்களை தற்போது பார்க்கலாம்.

டான் : டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். தந்தை, மகன் பாச பிணைப்பை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. டான் படம் 125 கோடி வசூல் செய்திருந்தது.

பீஸ்ட் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூலை பொருத்தவரையில் 135 கோடி வசூல் செய்திருந்தது.

வலிமை : நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்த வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் உருவாகி இருந்த படம் வலிமை. பைக் ஸ்டண்ட் காட்சிகள் இப்படத்தில் அதிகம் இடம் பெற்றிருந்தது. வலிமை படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் அஜித் ரசிகர்களால் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்றது. கிட்டத்தட்ட 234 கோடி வசூல் செய்திருந்தது.

விக்ரம் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் விக்ரம். இப்படத்தை கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருந்தார். விக்ரம் படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 360 கோடி வசூல் செய்தது.

பொன்னியின் செல்வன் : மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கிஸுடன் இணைந்து லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 315 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் விக்ரம் வசூலை முறியடிக்க உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →