செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தேவையில்லாமல் சிபிசக்கரவர்த்தி படத்தில் கழுத்தறுக்கும் ரஜினி.. ஆணி புடுங்குறதுல ஒரு நியாயம் வேண்டாமா தலைவரே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து ரஜினி சிபிச் சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் சிபி சக்கரவர்த்தி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் வாய்ப்பு மிக குறுகிய காலத்திலேயே கிடைத்துள்ளது.

Also Read :அஜித்தை கூப்பிட்டு ரஜினி சொன்ன அறிவுரை.. தப்பை சரிசெய்து இன்றுவரை அதே கோட்டில் நிற்கும் அஜித்

சிபி சக்கரவர்த்தி, ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்தை லைக்கா ப்ரொடக்சன் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்போது இந்த படத்தின் டிஸ்கஷன் சோமர்செட் ஹோட்டலில் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக பல சூப்பர் ஹிட் படங்களின் கதை குறித்து ஆலோசனை இந்த ஹோட்டலில் தான் நடைபெறுமாம்.

அவ்வாறு ஒரு ராசியான ஹோட்டல் என்ற பெயர் இதற்கு உண்டு. இப்போது சிபிச் சக்கரவர்த்தி படத்துக்கு டிஸ்கஷன் நடந்து வரும் நிலையில் ரஜினி இப்படத்தில் புதிய பிரபலம் ஒருவரை சேர்த்துள்ளார். அதாவது பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாந்தை சேர்த்துள்ளார்.

Also Read :ரஜினிகாந்தின் மகளுக்கு நாற்காலி கொடுக்காத பிரபல இயக்குனர்.. கொதித்தெழுந்த ரஜினிகாந்த்.!

விஜயேந்திர பிரசாந்த் ராஜமௌலியின் பாகுபலி போன்ற பல படங்களில் பணியாற்றி உள்ளார். ஆனால் ராஜமவுலி தவிர்த்து விஜயேந்திர பிரசாந்த் எழுத்தாளராக பணியாற்றிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. தற்போது சிபிச் சக்கரவர்த்தி புதுமையான விஷயங்களை படத்தில் சேர்க்க ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் அவருடன் போய் வயதில் மூத்தவரை சேர்த்துள்ளனர். அனேகமாக இது ரஜினியின் ஐடியாவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதற்கு பேசாமல் அவரையே இயக்குனராக போட்டு இருக்கலாம் என சிலர் கிண்டல் அடித்து பேசி வருகிறார்கள்.

Also Read :விஜய், அஜித்தால் வருத்தத்தில் கோலிவுட்.. ரஜினி, சிவகார்த்திகேயனால் ஓடுது பொழப்பு!

Trending News