பாடல்கள் எல்லாம் மில்லியன் வியூஸ்.. ஆனாலும் பழக்கத்திற்காக மெய்சிலிர்க்க வைத்த அனிருத்

சென்சேஷனல் இசையமைப்பாளரான அனிருத் இப்போது அடுத்தடுத்து இந்தியன் 2, ஜெயிலர் படங்களுக்கு இசையமைக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் 62 வது படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். மிக குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களின் படங்களுக்கு கூட இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து விட்டது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் சுருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே இந்திய சினிமா உலகின் சென்சேஷனாக மாறிவிட்டார். இதற்கு காரணம் ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் தான்.

Also Read: அனிருத்தை தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ் சினிமா.. ஓரம் கட்டப்பட்ட யுவன்

தொடக்க காலத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து கொண்டிருந்த அனிருத், குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைக்க தொடங்கி விட்டார். இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்தது.

படங்களுக்கு மட்டுமல்லாமல் ஆல்பங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார். அனிருத் இசையமைப்பதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் பிண்ணனி பாடகராகவும் களம் இறங்கி வெற்றி கண்டார். இவர் இசையமைக்கும் படங்களில் ஏதேனும் ஒரு பாடலை இவர் பாட தொடங்கினார்.

Also Read: தனுஷின் கேரியருக்கு ஆப்பு வைத்த அனிருத்.. நம்ப வைத்துக் கழுத்தறுத்த சம்பவம்

இவருடைய குரலுக்கு என்று ஒரு தனித்துவம் இருப்பதால் இவர் பாடும் அத்தனை பாடல்களுமே ஹிட் அடிப்பது மட்டுமல்லாமல் மில்லியன் வியூஸ்களை தாண்டி வருகிறது. ஆரம்ப காலத்தில் இவர் இசையமைக்கும் படங்களுக்கு மட்டுமே பாடிக் கொண்டிருந்த அனிருத் பின்பு யுவன் ஷங்கர் ராஜா, AR ரகுமான் இசையிலும் பாட ஆரம்பித்து விட்டார்.

இசையின் மீது தீரா ஆர்வம் கொண்ட அனிருத் தான் பாடும் பாடல்கள் எதற்குமே சம்பளம் வாங்குவது இல்லையாம். அனிருத் பாடும் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் அடித்து மில்லியன் வியூஸ்களை அல்லுக்குறது. இதற்கு அவர் நினைத்தால் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கலாம். ஆனால் அனிருத் சம்பளம் இல்லாமல் பாட்டு பாடி கொடுக்கிறார். அனிருத் இதுவரை 150 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

Also Read: அனிருத்தை துரத்திப் பிடித்த அட்லி.. கூட்டு சேர்ந்த சன் பிக்சர்ஸ்

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்