தீபாவளி என்றாலே பட்டாசு உடன் இணைந்து தொலைக்காட்சிப்பெட்டி முன்பு காலையில் எழுந்தவுடன் பட்டிமன்றம் பார்ப்பது அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை பார்ப்பது அதற்கு அடுத்தப்படியாக திரைப்படங்களைப் பார்ப்பது என ரசிகர்கள் தங்களது தீபாவளியை கொண்டாடுவார்கள். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சிகள் ஆன விஜய் டிவி, சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டு தங்களது சேனலில் பல திரைப்படங்களை ஒளிபரப்பி டிஆர்பியை உயர்த்தி உள்ளனர். அப்படி டி.ஆர்.பி யில் முதல் 6 இடங்களைப் பிடித்த திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.
டான்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் மே 13ஆம் தேதி வெளியான டான் திரைப்படம், பல கோடி வசூல் செய்து பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த நிலையில், தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியது. அந்தவகையில் தீபாவளியன்று மதியம் 1.30 மணி அளவில் ஒளிபரப்பப்பட்ட டான் திரைப்படம் 3.63 டிஆர்பி ரேட்டில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
Also Read : மறைமுகமாக ஆப்படித்த இளைய தளபதி.. ரெட் ஜெயிண்ட் மூவிஸ்சை பழிக்கு பழிவாங்கிய விஜய்
விக்ரம்: உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த மே மாதம் ரிலீசான விக்ரம் திரைப்படம் 500 கோடி வரை வசூலை படைத்தது. கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நிலையில் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியது. அந்த வகையில் தீபாவளியன்று மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பான விக்ரம் திரைப்படம் கிட்டத்தட்ட 4.42 டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
டாக்டர்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் ரிலீசான டாக்டர் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. கடந்த வருடம் தீபாவளியன்று டாக்டர் திரைப்படம் மாலை 6 மணிக்கு சன்.டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிலையில், இந்த வருடம் தீபாவளியன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு, 6.97 என்ற டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
அருணாச்சலம்: நடிகர் ரஜினிகாந்த்,சௌந்தர்யா உள்ளிட்டோரின் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படம் இன்றுவரை ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் பிடித்தமான திரைப்படம். இத்திரைப்படத்தை தீபாவளியன்று மதியம் 2 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பபட்ட நிலையில் 9.21 டிஆர்பி ரேட்டிங் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Also Read : ரஜினி செய்த பெரிய தவறு.. செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன பாலச்சந்தர்
விஸ்வாசம்: அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான விசுவாசம் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்தது. சன் டிவி தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பிய நிலையில் , 10.27 என்ற டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
பீஸ்ட்: இந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீசான நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் சன் டிவியில் முதல் முறையாக தீபாவளி அன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியுற்ற நிலையில், இத்திரைப்படத்தை தொலைக்காட்சியில் போட்டவுடன் பட்டாசுகளை வெடிப்பதை விட்டுவிட்டு பலரும் இப்படத்தை பார்த்தவர்கள் தான் அதிகம் போல, அந்த அளவிற்கு இந்த படத்தின் டிஆர்பி ரேட்டிங் கிட்டத்தட்ட 12.97 டி.ஆ.ர்பி ரேட்டிங்கை பெற்று முதலிடத்தில் உள்ளது.
Also Read : டிஆர்பி-யில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள்.. அதிரடி திருப்பத்தை ஏற்படுத்திய விஜய் டிவியின் சங்கமம்