இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 திரைப்படத்தை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 படம் மற்றும் தெலுங்கில் ராம்சரண் தேஜாவை வைத்து ஆர் சி 15 என்னும் படத்தையும் இயக்கி வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் இயக்கி வருவதால் சங்கர் படுபிஸியாக இருக்கிறார்.
இயக்குனர் மணிரத்தினம் சமீபத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என்னும் டாப் ஹீரோக்களை வைத்து எடுத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவரை தொடர்ந்து இப்போது இயக்குனர் சங்கரும் புனைவு நாவலை கையில் எடுத்திருக்கிறார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ கதையை படமாக்க இருக்கிறார்.
இப்போது சினிமா ரசிகர்களும் வரலாற்று படங்களை அதிகம் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது எல்லா மொழிகளிலுமே வரலாற்று படங்களை எடுக்க இயக்குனர்கள் தயாராகி விட்டார்கள். ஏற்கனவே இயக்குனர் மணிரத்தினத்தால் பொன்னியின் செல்வனை படிக்க ஆரம்பித்த ரசிகர்கள் இப்போது சங்கரால், வேள்பாரி நூலை தேட தொடங்கிவிட்டனர்.
வேள்பாரியின் மொத்த கதை இதுதான்: தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த சமயத்திலேயே நிறைய குறுநில மன்னர்களும் இருந்தனர். இந்த குறுநில மன்னர்களில் கடையேழு வள்ளல்கள் என்று அழைக்கப்பட்ட பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி ஏழு மன்னர்களும் அடங்குவர். இதில் பாரி மன்னன் தான் வேள்பாரி என்று அழைக்கப்படுகிறார். இன்னும் புரியும்படி சொன்னாலே ‘முல்லைக்கு தேர் ஈந்த பாரி’ இவர்தான்.
Also Read: பிரம்மாண்ட நாவலை படமாக்கும் ஷங்கர்.. சூர்யாவை விட பாலிவுட் ஹீரோவுக்கு முன்னுரிமையா?
பாரி மன்னன் பறம்பு நாட்டை ஆண்டு வந்தார். இந்த நாட்டில் மொத்தம் 300 ஊர்கள் மட்டுமே இருந்தாலும் பாரி தன் கொடை திறத்தால் புகழ்பெற்ற மன்னனாக திகழ்ந்தார். பாரியின் புகழும், பறம்பு நாட்டின் செழிப்பும் சேர, சோழ பாண்டிய மன்னர்களின் கண்களை உறுத்தியதால் பறம்பு நாட்டின் மீது தனித்தனியாக போர் தொடுத்து தோற்று போனார்கள்.
மூவேந்தர்களும் ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு பறம்பு நாட்டின் மீது போர் தொடுத்து பார்த்தனர். அப்போதும் மிஞ்சியது தோல்வி தான். வீரத்தால் பாரியை சாய்க்க முடியாது என அறிந்து கொண்ட பின் வீரத்தால் வீழ்த்த முடியாத வேள்பாரி மன்னனை துரோகத்தால் வீழ்த்தினர் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள். ஆதரவின்றி நின்ற பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை இருவருக்கும் ஒளவையார் பொறுப்பேற்று திருமணம் செய்து வைத்தார்.
Also Read: மூன்று பாகங்களாக பல நூறு கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. மணிரத்தினத்தை ஓவர்டேக் செய்யும் ஷங்கர்