குடும்ப குத்து விளக்கு மாதிரி நடிக்கிறது.. காசுக்காக பிக்பாஸ் லிப் லாக் நடிகை செய்த மட்டமான வேலை

நடிகைகளில் பலர் மார்க்கெட் இருக்கும் வரை நன்றாக பணம் பார்த்து விட்டு, மார்க்கெட் குறைந்தவுடன் சின்னத்திரை, விளம்பரங்கள், சமூக வலைத்தளங்களில் இன்ப்ளூயன்சர்கள் என சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதில் ஒரு சில நடிகைகள் கொஞ்சம் கூட யோசிக்காமல் பணம் வந்தால் போதும் என எப்படிப்பட்ட விளம்பரங்கள் என்றாலும் பரவாயில்லை என நடித்து விடுவார்கள்.

இதுபோன்ற வேலைகளால் இருந்த மார்க்கெட்டும் போவதுடன் மக்கள் மத்தியில் பெயரும் கெட்டு போய்விடும். இப்படி சமீபத்தில் மட்டமான விளம்பரத்தில் நடித்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார் முந்தைய பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர். குடும்ப குத்துவிளக்கு போல் இருந்து கொண்டு இவர் செய்த காரியம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: நான் உன்ன தங்கச்சினு நினைச்சேன் அவமானப்படுத்திட்ட.. ஜனனியால் ரணகளமான பிக்பாஸ் வீடு

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சீசன் ஆரம்பித்த நிலையில் இப்போது ஆறாவது சீசன் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. இதில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர்தான் ஜனனி ஐயர். சமீபத்தில் தன்னுடைய பெயருக்கு பின்னால் ஜாதி இருப்பதை நான் விரும்பவில்லை என்று கூறி ஐயரை நீக்கியிருக்கிறார்.

ஜனனியின் சமீபத்திய சமூக வலைத்தள பதிவு தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. வீடுகளை அலங்கரிக்கும் நிறுவனத்திற்காக விளம்பர பதிவை போட்டிருக்கும் ஜனனி, தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியில் பார் செட்டப் அமைத்து, அங்கு நின்று பார்ட்டி ட்ரெஸ்ஸில் ஆடுகிறார். மேலும் வீட்டில் பார் அமைப்பது தன்னுடைய நீண்ட நாள் கனவு என பதிவிட்டிருக்கிறார்.

Also Read: விதிகளை மீறியதால் எலிமினேட் செய்யப்பட்ட ஷெரினா.. 28 நாட்களுக்கு பிக் பாஸ் கொட்டி கொடுத்த சம்பளம்

தற்போது இந்த பதிவுக்கு பலரும் நெகடிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர். காசுக்காக ஜனனி இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார் எனவும், மேலும் குடும்ப குத்துவிளக்கு இருந்து கொண்டு வீட்டில் பார் அமைப்பது நீண்ட நாள் கனவு என கூறுவது ரொம்பவே ஓவராக இருப்பதாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ஜனனி ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது லக்ஸரி பட்ஜெட் டாஸ்குக்காக ஐஸ்வர்யா தத்தாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் அந்த சீசனில் இவரை அனைவரும் விஷ பாட்டில் என்று சொல்லும் அளவுக்கு தந்திரமாக நடந்து கொண்டார். இப்போது இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்து சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறார்.

Also Read: அவனா டா நீ! பலான கேசில் மாட்டிய விக்ரமன்.. நம்பவே முடியல ஊருக்கு தான் உபதேசமா?