திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யுடன் நடிக்க மறுத்த 5 வில்லன்கள்.. மார்க்கெட் போய்டுமோ என்ற பயத்தில் சாக்கு போக்காக சொன்ன காரணங்கள்

நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் இணையவிருக்கிறார். இந்த படம் கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது. இதில் தென்னிந்தியாவை சேர்ந்த டாப் ஹீரோக்களை விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த ஹீரோக்கள் ஒவ்வொரு காரணத்தை சொல்லி விலகியிருக்கிறார்கள்.

பிரித்விராஜ் சுகுமாரன்: மலையாள சினிமாவின் மிக சிறந்த நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் சத்யராஜ், சித்தார்த் உடன் படங்களில் இணைந்திருக்கிறார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக தளபதி 67ல் நடிக்க மறுத்திருக்கிறார்.

Also Read: தொடர் பிளாப், கடன் சுமை.. வாய்ப்பு கேட்டு தளபதியிடம் சரண்டரான நடிகர்

மிஷ்கின் : மிஷ்கின் இயக்குனராக மட்டுமல்லாமல் இப்போது நடிப்பிலும் கலக்கி வருகிறார். மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே விஷாலுடன் ஏற்பட்ட தகராறு மற்றும் பெரிய தலைகளுடன் நடித்தால் எடுபடாமல் போய்விடுவோமோ என்னும் பயத்தில் தளபதி 67ல் நடிக்க மறுத்துவிட்டார்.

பகத் பாசில்: இந்திய சினிமாவில் எதார்த்தமாக நடிக்க கூடிய நடிகர்களில் ஒருவர் பகத் பாசில். ஏற்கனவே தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்திலும் நடித்தார். தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் வாய்ப்பை கால்ஷீட் பிரச்சனை காரணமாக மறுத்திருக்கிறார்.

Also Read: தளபதி 67-ல் வில்லனாக நடிக்க மறுக்கும் மிஷ்கின்.. காரணம் கேட்டு விழி பிதுங்கிய லோகேஷ்

நிவின் பாலி: நிவின் பாலி பிரபலமான மலையாள நடிகர்களில் ஒருவர். 2012 ஆம் ஆண்டு நஸ்ரியாவுடன் நடித்த நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார். 2014 ஆம் ஆண்டு இவர் நடித்த பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பில்லை என்றாலும் தளபதி 67ல் நடிக்க ஒரு பெரிய தொகையை எதிர்பார்க்கிறாராம்.

விஷால்: நடிகர் விஷாலுக்கு பெரிய அளவில் எந்த படங்களும் அமையவில்லை. சொந்த படம் எடுத்தும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. மற்ற படங்களில் நடித்தும் வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல பட வாய்ப்புக்காக விஷால் கடின முயற்சி செய்து கொண்டிருக்கிறார். கடன் பிரச்சனை மட்டுமில்லாமல் இவர் மீது பல புகார்களும் இருக்கின்றன. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தளபதி 67ல் நடிக்க 25 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.

Also Read: வசூல் வேட்டையாட தொடர்ந்து 6 நாட்களை லாக் செய்த லோகேஷ்.. பண்டிகை நாளை குறி வைக்கும் தளபதி 67

Trending News