சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

மாதவனுக்காக உருவாக்கிய கதை.. அஜித் நடித்ததால் படுதோல்வி, புலம்பி தவிக்கும் இயக்குனர்

ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி அந்தஸ்தை பிடித்திருக்கும் அஜித் டாப் ஹீரோவாக மட்டுமல்லாமல் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ஒரு நடிகராகவும் இருக்கிறார். தற்போது கூட லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஏகே 62 படத்திற்காக அவருக்கு அதிகபட்ச சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

இப்படி உச்சாணி கொம்பில் இருக்கும் அஜித் பல தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார். அதில் சில வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த ஒரு திரைப்படம் தோல்வி அடைந்ததால் அதை நினைத்து இன்னும் ஒரு இயக்குனர் புலம்பி தவிக்கிறார். அதாவது சண்டக்கோழி, பையா போன்ற பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த லிங்குசாமி ரன் படம் வெளிவந்த சமயத்தில் மாதவனுக்காக ஒரு கதையை தயார் செய்திருக்கிறார்.

Also read: அஜித் கதையில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி.. முடியாது எனக்கூறி மொக்கை வாங்கிய இயக்குனர்

அதில் ஹீரோ கல்லூரி மாணவனாக இருப்பது போன்றும் பின்பு அரசியலுக்குள் வருவது போன்று உருவாக்கி இருக்கிறார். அதற்கு மாதவன் தான் சரியாக இருப்பார் என்றும் முடிவு செய்திருந்தாராம். ஏனென்றால் ரன் திரைப்படத்தில் மாதவனின் நடிப்பும், வேகமும் அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதனால் இந்த கதையில் அவர் நடித்தால் பக்காவாக பொருந்தும் என்று அவர் கணக்கு போட்டு இருக்கிறார்.

அப்போது திடீரென அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. அப்போது இப்படி ஒரு படத்தை எடுக்க போவது குறித்து அவர் பேசியிருக்கிறார். கதையைக் கேட்ட அஜித் நானே இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மிகப்பெரிய நடிகர் இப்படி கூறும் போது வேண்டாம் என்று எப்படி சொல்வது என தெரியாமல் லிங்குசாமியும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.

அப்படி உருவானது தான் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான ஜீ திரைப்படம். கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதனால் நொந்து போன லிங்கு சாமி அதற்கு அஜித் நான் முழு காரணம் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் அந்த படத்திற்காக அஜித் உடல் எடையை கொஞ்சம் குறைக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.

Also read: எம்ஜிஆருக்கு அடுத்து அஜித்துக்காக கோவில் கோவிலாக சுற்றும் நடிகர்.. கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத ஏகே

ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரால் எடையை குறைக்க முடியவில்லை. அதனால் படத்தில் ஒரு சில இடங்களில் அவர் ஒல்லியாக இருப்பது போன்றும் ஒரு சில இடங்களில் எடை அதிகமாக இருப்பது போன்றும் தெரியும். அதேபோன்று கிளைமாக்ஸ் காட்சியில் மீசை, தாடி இருக்க வேண்டும் என்று லிங்குசாமி படம் ஆரம்பிக்கும் முன்பே கூறியிருக்கிறார். ஆனால் அஜித் குறிப்பிட்ட அந்த காட்சியில் ஒட்டு தாடி, மீசை வைத்து தான் நடித்தாராம்.

அது கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் இருந்திருக்கிறது. இப்படி பல விஷயங்கள் அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. அஜித் பெரிய நடிகர் என்பதால் தான் வேறு வழியில்லாமல் இதற்கெல்லாம் அட்ஜஸ்ட் செய்து லிங்குசாமி படத்தை முடித்திருக்கிறார். ஆனால் அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. இதுவே மாதவன் படத்தில் நடித்திருந்தால் நிச்சயம் வேறு மாதிரி கதைக்களம் இருந்திருக்கும் படமும் நன்றாக ஓடி இருக்கும் என்று இப்போது லிங்குசாமி கூறி வருத்தப்பட்டு வருகிறார்.

Also read: இயக்குனர்கள் கொடுத்த டார்ச்சரால் அஜித் கைவிட்ட 5 படங்கள்.. லட்டு மாதிரி சூர்யாவிற்கு அடித்த ஜாக்பாட்

- Advertisement -spot_img

Trending News