திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இரண்டாம் நிலை டாப் ஹீரோக்கள்.. முதல்முறையாக 100 கோடி வசூலை தாண்டிய ஐந்து படங்கள்

முதல் நிலை கதாநாயகனாக கொடி கட்டி பறக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை பெற்று தந்திருக்கிறது. அவ்வாறு இவர்களின் பெயர்கள் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இரண்டாம் நிலை கதாநாயகனாக அழைக்கப்படும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, விக்ரம் ஆகியோரின் படங்கள் மக்களின் வரவேற்பு பெற்று வருவதை பார்க்க முடிகிறது. மேலும் இவர்களின் படங்கள் நல்ல வசூலை பெற்று தந்தது. அவ்வாறு 100 கோடி வசூலை பெற்ற 5 இரண்டாம் நிலை கதாநாயகர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: சக நடிகைகளை பொறாமை பட வைத்த சாய் பல்லவியின் 4 கதாபாத்திரம்.. தனுசுக்கு டஃப் கொடுத்த நடிகை

சிம்பு: தன் தோற்றத்தால் பட வாய்ப்பை இழந்து காணப்பட்ட நிலையில் இவருக்கு ரீ என்ட்ரி ஆக அமைந்தது தான் மாநாடு. 2021ல் வெளிவந்த இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படம் சிம்புவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இப்படத்தின் மூலம் மக்களின் வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்று 117 கோடி வசூலை அள்ளி சென்றது.

தனுஷ்: இவர் பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அசுரன் படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் இதனின் வசூல் பெரிய அளவிற்கு இருந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த வாத்தி படம் 118 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

Also Read: தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பை கிளப்பிய 2வது ஹிட் கொடுக்க போகும் 5 இயக்குனர்கள்.. அண்ணனுக்கு போட்டியாக வருவாரா தனுஷ்

விக்ரம்: 2015ல் எஸ் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் பாடி பில்டராக வரும் லிங்கேசன் என்னும் இவர் தன் அடுத்தடுத்த வளர்ச்சியை பிடிக்காதவர் விரிக்கும் சதி வலையில் சுக்கி கொள்வது போல கதை அமைந்திருக்கும். இப்படத்தில் விக்ரமின் நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும். மேலும் இப்படத்தின் மூலம் இவருக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. அதைத்தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்று சுமார் 239 கோடியை வசூலித்தது.

கார்த்தி: அண்மையில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் கார்த்தி தன் இரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார். இதில் நீர் வளத்தை அழித்து குடிநீர் தட்டுப்பாட்டை மையமாகக் கொண்டு கதை அமைந்திருக்கும். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் கார்த்தி முன்னாள் ரா பிரிவை சேர்ந்தவர் போல காட்டப்பட்டிருக்கும். இப்படமும் 103 கோடி வசூலை பெற்று பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது.

Also Read:  சிம்பு படத்தின் நடிகையை வச்சு செய்யும் ரசிகர்கள்.. இனி அந்த நடிகை எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பில்லை

சிவகார்த்திகேயன்: 2021ல் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருப்பார். இதுவரை இவரின் படங்களை காட்டிலும் இப்படத்தில் இவரின் நடிப்பு வித்தியாசமாக அமைந்து இருக்கும். ஆனாலும் அவை மக்களின் எதிர்பார்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் 100 கோடி வசூலை பெற்று தந்தது.

Trending News