ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

திரிஷாவின் முதல் வெற்றி படம்.. இல்லாத ஒரு விஷயத்துக்காக அடித்து கொள்ளும் நம்பர் நாயகிகள்

நடிகை திரிஷா சமீபத்தில் தான் தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார். திரிஷாவுக்கு 40 வயது ஆகிவிட்டது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு அழகும், இளமையுடனும் இருக்கிறார். அதுவும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு இன்னும் அழகு ஏறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு விட்ட இடத்தை திரும்ப பிடித்து இருக்கிறார் இவர்.

நடிகை திரிஷா கிருஷ்ணன் மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர். முதலில் படங்களில் சின்ன, சின்ன கேமியோ ரோல்களில் தான் இவர் நடித்து வந்தார். பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் கூட சிம்ரன் தோழியாக கூட்டத்தில் ஒருவராக த்ரிஷாவை பார்க்கலாம். அதன் பின்னர் இவருடைய வளர்ச்சி என்பது பிரம்மிப்பான ஒன்றுதான்.

Also Read:அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த 5 படங்கள்.. விஜய்க்குப்பின் ஒர்க் அவுட்டான செம கெமிஸ்ட்ரி

கிடைத்த வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருந்த திரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட்டை கொடுத்த திரைப்படம் என்றால் அது மௌனம் பேசியதே தான். சூர்யாவுடன் இவர் நடித்த இந்த படம் தான் திரிஷாவின் மார்க்கெட் எகிறுவதற்கு முதல் காரணமாக இருந்தது. அன்றிலிருந்து திரிஷாவின் கேரியர் ஏறுமுகமாகவே தான் இருந்து வருகிறது.

இன்று திரிஷா அடைந்திருக்கும் வெற்றி என்பது அவராலேயே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றுதான். சில வருடங்களாக இருக்கும் இடம் தெரியாமல் கிடைத்த ஒன்று, இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்த திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் மறு வாழ்க்கை கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு இடையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்காக திரிஷா மற்றும் நயன்தாரா இடையே ஒரு பெரிய போட்டியே நடைபெற்று வருகிறது.

Also Read:கவர்ச்சி நடிகையோடு பப்ளிக்காக மல்லுக்கட்டிய குடும்ப குத்து விளக்கு.. கூச்சமே இல்லாமல் பேசிய கெட்ட வார்த்தை

திரிஷா வெற்றி முகத்தில் ஏறிக் கொண்டிருக்கும் நேரத்தில், நயன்தாரா திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு எந்த படங்களும் தற்போது அமையவும் இல்லை. ஆனால் உண்மையை சொல்ல போனால் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் யாருக்குமே அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்படவில்லை. நயன்தாராவே தயாரிப்பாளர்களை வற்புறுத்தி படத்தின் டைட்டில் கார்டுகளில் அதை போட வைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இல்லாத ஒரு பட்டத்திற்காக இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வது என்பது ரொம்பவே வேடிக்கையாக தான் இருக்கிறது. உண்மையில் நயன்தாரா வந்த பிறகு தான் திரிஷாவின் மார்க்கெட் குறைந்தது. தற்போது திரிஷா விட்ட இடத்தை பிடித்து விட்டார். நயன்தாரா எந்த பெரிய பட வாய்ப்புகளும் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

Also Read:பலான உறவில் இருக்கும்போதே ஹோட்டலில் மாட்டிய நடிகை.. பண்ணை வீட்டிற்கு மாற்றிய தொழிலதிபர்

Trending News