வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

உயிர் நண்பன் சரத்பாபு உடன் ரஜினி வெற்றி கண்ட 6 படங்கள்.. ஜமீன்தாரை வைத்து அம்பலத்தானுக்கு வைத்த ஆப்பு

தனக்குரிய எதார்த்தமான நடிப்பால் மக்கள் நெஞ்சில் இடம் பிடித்தவர் சரத்பாபு. தெலுங்கில் அறிமுகமாகி இவர் அதன்பின் அடுத்தடுத்த படங்களின் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தன்னை நிரூபித்துக் கொண்டவர்.

மேலும் தன்னுடைய எளிமையான தோற்றத்தின் மூலம் நடிப்பை வெளிப்படுத்தியவர். இவர் நடித்த 200க்கும் மேற்பட்ட படங்களில் பெரும்பாலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருக்கிறார். அதை தவிர்த்து துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அவ்வாறு இவர் ரஜினியுடன் வெற்றி கண்ட 6 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: சரத்பாபு நடிப்பில் சூப்பர் ஹிட்டான 6 படங்கள்.. ரஜினியுடன் மல்லுக்கட்டிய அசோக்கை மறக்க முடியுமா!

முள்ளும் மலரும்: 1978ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் முள்ளும் மலரும். இப்படத்தில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்னும் பாடலில் இவரின் முக தோரணை மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும். மேலும் இப்படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

வேலைக்காரன்: 1987ல் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் சரத் பாபு, ரஜினிகாந்த், அமலா, பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் சரத் பாபு, பல்லவி இடம்பெறும் காதல் காட்சிகள் சிறப்புற அமைந்திருக்கும். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த 5 சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள்.. மனோபாலா கொடுத்த அந்த சூப்பர் ஹிட்

முத்து: 1995ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் முத்து. ரஜினியின் நடிப்பால் மாபெரும் வெற்றியை கண்ட படம். மேலும் ஜமீன்தார் வேடத்தில் சிறப்புற நடித்திருப்பார் சரத்பாபு. இப்படத்தில் அம்பலத்தானின் மகளை ஜமீன்தாருக்கு திருமணம் செய்வதாக ஒப்புக்கொள்ளப்படும். ஆனால் ஜமீன்தார் மீனாவை காதலிப்பார். இதை அறியாத அம்பலத்தானுக்கு ஆப்படித்திருப்பார் சரத் பாபு.

அண்ணாமலை: 1992ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அண்ணாமலை. இப்படத்தில் பணக்கார வீட்டு மகனாக இடம் பெறுவார் சரத்பாபு. மேலும் ஏழ்மை நிலையில் உள்ள ரஜினியை தன் நண்பனாக ஏற்றுக் கொள்வார். இவர்களின் இந்த நட்பு படத்திற்கு நல்ல விமர்சனத்தை பெற்று த் தந்தது.

Also Read: கமலை போல் மாறத் துடிக்கும் ரஜினி.. விக்ரம் படத்தால் இப்படி ஒரு மாற்றமா?

பாபா: 2002ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பாபா. இப்படத்தில் ரஜினி, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சரத்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஒரு பிரச்சனைக்குள் சிக்கிக் கொள்ளும் பெண்ணின் தந்தையாக சரத் பாபு நடித்திருப்பார். ரஜினி மற்றும் சரத் பாபு காம்பினேஷனில் இடம் பெற்ற படங்களில் இதுவும் ஒன்றாகும்.

நெற்றிக்கண்: 1981 இல் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நெற்றிக்கண். இப்படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினி நடித்திருப்பார். மேலும் சரத் பாபு படத்தில் சிறிய கதாபாத்திரமான கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். இருப்பினும் இவரின் எதார்த்தமான நடிப்பு மக்களிடையே பேசப்பட்டது.

Also Read: பல ஹீரோக்களை மிகப்பெரிய திறமைசாலியாக மாற்றிய ஒரே வில்லன்.. பாட்ஷா படத்துல ரஜினிக்கு இருந்த நடுக்கம்

- Advertisement -spot_img

Trending News