தமிழ் சினிமாவில் தனித்துவமான பாணியில் கலகலப்பான படங்களை இயக்கியதன் மூலம் பெயரெடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளியான சென்னை 6000028, சரோஜா, மங்காத்தா, மாநாடு போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதே சமயம் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய மாஸ் மற்றும் கார்த்தியை வைத்து இயக்கிய பிரியாணி அதன் தொடர்ச்சியாக இப்போது நாக சைதன்யா தமிழுக்கு என்ட்ரி கொடுத்த கஸ்டடி போன்ற படங்கள் அனைத்தும் வெங்கட் பிரபுவுக்கு படு தோல்வியாக அமைந்தது.
கெட்டதுலையும் ஒரு நல்லது இருக்கு என்பது போல் என்னதான் கஸ்டடி பிளாப் ஆன படமாக இருந்தாலும் வெங்கட் பிரபுவின் பத்து வருட தவத்திற்கு கிடைத்த பலனாய் இப்போது விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். வெங்கட் பிரபு இருந்தால் அந்த படத்தில் நிச்சயம் யுவன் சங்கர் ராஜாவும் இருப்பார். அப்படித்தான் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் வெங்கட் பிரபு தனக்குத்தானே ஆப்பு அடித்துக் கொண்டது போல் அவருடைய படத்தால் இப்போது 10 கோடியை பறி கொடுத்திருக்கிறார். வெங்கட் பிரபு- ஏஜிஎஸ் கூட்டணியில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் பூஜையுடன் துவங்க உள்ளது. இந்த படத்திற்காக வெங்கட் பிரபு ஏஜிஎஸ் இடம் பெரும் தொகையை சம்பளம் கேட்டு இருக்கிறார்.
ஏற்கனவே ஏஜிஎஸ் கூட்டணியில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க விருந்தார் வெங்கட் பிரபு அதற்கு 7 கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார். இப்பொழுது தளபதி 68 படத்திற்கு 20 கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஏஜிஎஸ் பத்து கோடி தான் கொடுக்க முடியும் என திட்டமாய் கூறியிருக்கிறது.
எல்லாத்துக்கும் காரணம் இந்த கஸ்டடி படம் தான். இந்த படம் பெரும் அடியை வெங்கட் பிரபுவுக்கு கொடுத்தது. இதையெல்லாம் மனதில் வைத்து 20 கோடி கேட்டவருக்கு 10 கோடி தான் கொடுக்க முடியும் என கூறிவிட்டது ஏஜிஎஸ். வெங்கட் பிரபுவுக்குத்தான் இப்படி ஒரு நிலைமை. ஆனால் விஜய்க்கு 120 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்க ஏஜிஎஸ் தயாராக இருக்கிறது.