ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நாசுக்காக ஒதுங்கிய கமல், ரஜினி.. சிவகார்த்திகேயனை மீண்டும் தூக்கி விட தனுஷ் காட்டிய விசுவாசம்

Dhanush, Sivakarthikeyan: சின்னத்திரை நடிகராக சுற்றித்திரிந்த சிவகார்த்திகேயன் இப்போது வெள்ளித்திரையில் முக்கிய நடிகர்கள் ஒருவராக வர தனுஷும் காரணம். அதாவது தன்னுடைய 3 படத்தில் சிவகார்த்திகேயனை தனுஷ் நடிக்க வைத்திருந்தார். அதன் பிறகு அவரது திறமையை பார்த்து தனது சொந்த தயாரிப்பிலேயே சிவாகார்த்திகேயன் படத்தை தயாரித்து வந்தார்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சிவகார்த்திகேயன் சினிமாவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தவுடன் தனுஷ் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் மீண்டும் படங்களில் இணையாமல் இருந்தனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் வெற்றி படங்கள் கொடுத்து வந்த நிலையில் கடைசியாக பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது.

Also Read : எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்.. மிரட்டும் சிவகார்த்திகேயனின் மாவீரன் ட்ரெய்லர்

இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மாவீரன் படத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட கடவுளின் ஒரு குரல் கேட்கும் படியாக வைக்கப்பட்டுள்ளதாம். இதற்கு ஆரம்பத்தில் ரஜினி மற்றும் கமல் ஆகியோரை படக்குழு அணுகியுள்ளது.

ஏனென்றால் ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கமல் குரல் கொடுத்திருப்பார். ஆனால் மாவீரன் படத்தில் குரல் கொடுக்க ரஜினி மற்றும் கமல் இருவருமே நாசுக்காக மறுப்பு தெரிவித்து விட்டார்களாம். அதன் பிறகு தான் தனுஷ் இடம் இதுகுறித்து கேட்டுள்ளனர்.

Also Read : சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயனால் மாறி வரும் கலாச்சாரம்.. டம்மி பீஸ் ஆக மாறும் ஹீரோயின்கள்

அந்தச் சமயத்தில் பழைய பகை எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனுஷ் உடனடியாகவே மாவீரன் படத்திற்கு குரல் கொடுக்க சம்மதித்தாராம். மேலும் பல வருடங்களுக்குப் பிறகு இதன் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் மாவீரன் படத்தில் இணைந்து உள்ளார்கள். இப்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் தனுஷின் 50வது பட பூஜை போடப்பட்டது. இதற்கான படப்பிடிப்பும் இந்த வாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இப்போது மாவீரன் படத்தில் தனுஷ் குரல் கொடுத்திருப்பதை அறிந்து இப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Also Read : சின்ன வயசு ஆசை, பல கோடி செலவு செய்த தனுஷ்.. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன பரிதாபம்

Trending News