புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் பலவீனமான ஜெயிலர்.. சன் பிக்சர்ஸ் வசூலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்

Jailer: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்தை எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

அதிலும் இப்படத்தின் முதல் பாடலான காவாலா இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அதில் தமன்னாவின் ஆட்டத்தை பார்த்த பலரும் அதேபோன்று ஆடி இன்ஸ்டாகிராம் பக்கங்களை தெறிக்க விட்டு வருகின்றனர். அந்த ஆரவாரம் அடங்குவதற்குள்ளாகவே இரண்டாம் பாடலை வெளியிட்ட பட குழு மிகப்பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

Also read: அடுத்த சூப்பர் ஸ்டாராக ஆசைப்படுகிறீர்களா.? லாபகமாக பதில் அளித்து எஸ்கேப்பான சிவகார்த்திகேயன்

நான் தான் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி தன் இடத்தை பிடிக்க பிளான் போடும் நடிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்த பாடல் வரிகள் தான் இப்போது பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும் ஜெயிலர் வெளியாவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் பெரிய அளவில் எந்த ப்ரமோஷனும் நடைபெறாதது சிறு ஏமாற்றமாக தான் இருக்கிறது.

சாதாரண படங்களலையே பட குழுவினர் சோசியல் மீடியாக்கள் மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். அதிலும் சிலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல சுவாரஸ்யமான ப்ரமோஷன்களையும் செய்து வருகின்றனர். அப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் படத்தின் ப்ரமோஷன் இப்போது மிகவும் பலவீனமாக இருப்பது சிறு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Also read: 2 பிள்ளை பெற்ற பிறகு ரஜினிக்கு வந்த காதல்.. அந்த நடிகையை தான் கட்டுவேன் என முரண்டு பிடித்த சூப்பர் ஸ்டார்

அது மட்டுமல்லாமல் இப்படத்தில் பான் இந்தியா நடிகர்கள் போன்ற பல சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் படக்குழு அசால்ட்டாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஒரு வகையில் சன் பிக்சர்ஸ் வசூலுக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கிறது.

இருப்பினும் இனிவரும் நாட்களில் படத்தை நன்றாக விளம்பரப்படுத்தினால் நிச்சயம் ரஜினியின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேற லெவலில் இருக்கும். அந்த வகையில் ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் பலவீனமாக இருக்கும் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் வித்தியாசமான ப்ரமோஷன் மூலம் தூக்கிப் பிடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: ஊரே பத்திகிட்டு எரியுது உங்களுக்கு என்ன கவலை.. வாயை திறக்காத ரஜினி, கமல், விஜய், அஜித்தால் பெரும் சர்ச்சை

Trending News