Rajini Condition to Nelson: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானதை ஒட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை தெறிக்க விடும் வகையில் ரஜினியின் நடிப்பு மாஸாக இருக்கிறது. இந்த மாதிரி நடிப்பை தான் தலைவரிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்தோம் என்று விசில் அடித்து சொல்ல கூடிய அளவிற்கு பட்டையை கிளப்பி இருக்கிறார்.
மேலும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் பார்க்கும் வரை எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யக்கூடாது என்று இயக்குனர் நெல்சனுக்கு, ரஜினி கண்டிஷன் போட்டிருக்கிறார். அதற்கு காரணம் இவர் பீஸ்ட் படத்தை எடுத்த நேரத்தில் நிறைய பேட்டிகள், ப்ரோமோஷன் மற்றும் ஓவராக ஆட்டம் போட்டிருந்தார்.
ஆனால் இவர் ஆட்டம் போட்டதற்கு மொத்தமாக பீஸ்ட் படம் நல்லா வச்சு செஞ்சிருச்சு. இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் போகவில்லை. அனைத்து தரப்பிலும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது. அதுவும் இப்படத்தை கழுவி கழுவி ஊற்றும் அளவிற்கு ரசிகர்களிடமிருந்து மொக்கை வாங்கியது.
அதனாலேயே படம் ரொம்பவே அடிபட்டுவிட்டது. இந்த நிலைமை ஜெயிலர் படத்திற்கு வந்து விடக்கூடாது என்பதற்காக ரஜினி உஷாராகி விட்டார். தற்போது ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது. அதனால் படம் ரிலீஸ் ஆவது வரை தேவை இல்லாமல் எந்த ஒரு சலசலப்பும் வேண்டாம்.
அந்த நாள் வரை மட்டுமாவது கொஞ்சம் அமைதியாக இருங்கள். முக்கால்வாசி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதையே தவிர்த்து விடுங்கள். அதை செய்கிறேன், இப்படி பண்ணுகிறேன் என்று எந்த ஒரு எக்ஸ்ட்ரா ப்ரமோஷனும் செய்யத் தேவையில்லை என நெல்சனுக்கு ஆர்டர் போட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
இதனாலையே நெல்சன் இருக்கும் இடம் தெரியாமல் கமுக்கமாக இருந்து வருகிறார். மொத்த ஆட்டத்தையும் படம் ரிலீஸ் ஆன பிறகு வச்சுக்கலாம் என்று பொறுமையாக இருக்கிறார். அத்துடன் இப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் ஆட்டோ பாம் மாதிரி வெடிக்கப் போகிறது. மேலும் நெல்சனுக்கு ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.