திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்தியன் 2க்கு போட்டியாக விஜய் செய்ய போகும் விஷயம்.. தளபதிக்காக சொல்லி அடிக்க தயாரான வெங்கட் பிரபு

Thalapathy 68 Update: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தளபதி விஜய் நடித்த லியோ படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜயின் 68 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் என்பது அதிகாரப்பூர் அறிவிப்பாக உறுதியாகி இருக்கிறது. மேலும் கதை விவாதங்கள் எல்லாம் முடிந்து படத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது வரை தேர்வு செய்யப்பட்டு விட்டது.

தளபதி 68 படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் ஜோதிகா ஒரு படத்தில் இணைவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும், எதனால் இது ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்புகள் நிறைந்த கேள்விகளும் இருந்தது.

Also Read:மதில் மேல் பூனையாக இருக்கும் விஜய்.. நம்பி அசிங்கப்பட போகும் தளபதி, அடித்து சொல்லும் பிரபலம்

நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதில் அவருக்கு அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டர்கள் இருக்கிறதாம். அப்பா கேரக்டருக்கு நடிகை ஜோதிகாவும், மகன் கேரக்டருக்கு நடிகை பிரியங்கா அருள் மோகனும் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள். மேலும் படத்தைப் பற்றிய புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு தன்னை மீண்டும் ஒரு வெற்றி இயக்குனராக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது மற்றும் தளபதி விஜய் வைத்து அவர் கண்டிப்பாக ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறது. இதனால் வெங்கட் பிரபு விஜய்க்காக பக்காவாக பிளான் போட்டு படத்தின் திரை கதையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உபயோகப்படுத்த இருக்கிறாராம்.

Also Read:லோகேஷை பின்னுக்கு தள்ள ஷங்கர் எடுக்கப் போகும் ஆயுதம்.. ரஜினி, கமல் கூட்டணியில் புது முயற்சி

உலகநாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தில் கமலை இளமையாக காட்ட வி எஃப்எக்ஸ் தொழில்நுட்பம் ஒன்று உபயோகப்படுத்தப்படுகிறது என தகவல்கள் வெளியானது. இதே தொழில்நுட்பத்தை தான் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தில் உபயோகப்படுத்த போகிறாராம். இதில் விஜய்யை இளமையாக காட்டப் போகிறார்களா அல்லது முதுமையாக காட்டப்போகிறார்கள் என்பது இனி தான் தெரியும்.

இந்தியன் 2 படத்திற்கு முன்பே இயக்குனர் லோகேஷ் தன்னுடைய விக்ரம் படத்தில் இந்த தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்கு பணம் அதிகம் செலவாகும் என்பதாலும் நேரமும் அதிகமாகும் என்பதாலும் கைவிட்டு விட்டார். தற்போது இந்தியன் 2 படத்திற்கு போட்டியாக வெங்கட் பிரபு இதை செய்ய இருக்கிறார்.

Also Read:சியர்ஸ் கேளாக லியோ டாட்டூவுடன் த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 40 வயசுலையும் என்ன பொண்ணுடா!

Trending News