Actor Simbu: பொதுவாக சினிமா பிரபலங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் அப்பட்டமாக உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடும். சுவருக்கு கூட காது உண்டு என்பதற்கு ஏற்ப பிரபலங்களின் நடவடிக்கைகள் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. அப்படி தான் சிம்புவின் பெயர் காற்றில் நாலா பக்கமும் பறந்தது. அந்த வகையில் ஒரு காலத்தில் கெட்ட பெயர் அனைத்திற்கும் சொந்தக்காரராக விளங்கினார்.
அதன் பின் வயசு ஆக ஆக அனுபவம் வந்துவிடும் என்பதற்கு ஏற்ப இப்பொழுது சற்று திருந்திவிட்டார் என்ற பேச்சுக்களும் வருகிறது. இருந்தாலும் அரசல் புறசலாக இவரைப் பற்றி சில பொல்லாப்பு பேச்சுக்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதெல்லாம் இவருடைய ஆர்வக்கோளாறால் நடக்கிறது என்று இவரை பற்றி புரிந்து கொண்டார்கள்.
ஆனால் இப்பொழுது இவரைப் போலவே இன்னொரு நடிகரும் தொடர்ந்து அவப்பெயரே எடுத்துக் கொண்டு வருகிறார். கொடுத்த டேட்டுக்கு சூட்டிங் வர மறுக்கிறார். படம் நடிக்கிறேன் என்று அட்வான்ஸ் பணத்தை பெற்றுக்கொண்டு தயாரிப்பாளர்களை டீலில் விடுகிறார். இதனால் சில தயாரிப்பாளர்கள் இவர் மீது மொத்த கடுப்பில் இருக்கிறார்கள்.
எப்படி சிம்புக்கு கெட்ட நேரம் வாட்டி வதைத்ததோ, அதை போல் தற்போது தனுஷுக்கும் கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது. இப்படி தொடர்ந்து தனுஷ் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் இவருடைய விவாகரத்தும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதாவது இவருடைய பொண்டாட்டி இவருடன் இல்லாமல் தான் இவருக்கு தொடர்ந்து சிக்கல்கள் வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அத்துடன் இவருடைய முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்த முடியவில்லை. குடும்பம் குட்டியுமாய் இருந்தவருக்கு தன்னந்தனியான வாழ்க்கை ரொம்ப வெறுப்பை கொடுப்பதால் இந்த மாதிரி சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்.
பொதுவாக ஒரு பழமொழி உண்டு தனி மரம் தோப்பாகாது என்று. அது போல தான் தனுஷின் நிலமையும் தற்போது இருக்கிறது. என்னதான் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வீடு கட்டினாலும், அங்கே மனைவி மகன்கள் என்று குடும்பமாக இருந்தால் மட்டுமே முழுமையான சந்தோஷத்தை பெற முடியும். அத்துடன் வேலையிலும் கவனம் வரும். இதெல்லாம் இல்லாமல் தான் தற்போது தனுஷ் அல்லோல பட்டு வருகிறார்.
Also read: தாத்தா சாயலில் இருக்கும் தனுஷ் மகன் யாத்ரா.. அப்பா, அம்மாவை மிஞ்சிய உயரம், வைரலாகும் ஃபோட்டோ