சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கடமைக்காக ரெண்டு விஷயத்தை செஞ்சிட்டு கமுக்கமாக இருக்கும் மாறன்.. அனிருத்தை டீலில் விட்ட பரிதாபம்

Aniruth: ஒரு படம் முழுமையாக வெற்றி அடைந்தால் அதில் அதிகமாக லாபம் பார்க்கக் கூடியவர் தயாரிப்பாளர் மட்டுமே. அந்த வகையில் விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் கமல் அப்படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் அதில் நடித்த நடிகர்களுக்கு மற்றும் இசையமைத்த அனைவருக்கும் பரிசுகளை வாரி கொடுத்தார்.

அதேபோல் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படமும் சாதனை படைக்கும் அளவிற்கு வெற்றி பெற்று வசூல் ஆகி இருக்கிறது. அதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவருடைய பங்கிற்கு ரஜினி மற்றும் நெல்சனுக்கு காரை பரிசாக வழங்கினார். ஆனால் இதோடு என் கடமை முடிந்து விட்டது என்று அமைதியாகிவிட்டார்.

Also read: ஜெயிலரை விட டபுள் மடங்கு நெல்சன் வாங்க போகும் சம்பளம்.. ஃபெவிக்கால் போட்டு ஒட்டிய சன் பிக்சர்ஸ்

ஆனால் இப்படத்திற்கு உயிரூட்டும் விதமாக இருந்தது ராக்ஸ்டார் அனிருத் தான். அத்துடன் இப்படத்தில் குறைந்த சம்பளத்தை வாங்கி அதிகளவில் மக்களிடம் வரவேற்பை பெற்ற வில்லன் விநாயகத்துக்கும் இதுவரை கலாநிதி மாறன் பெருசாக எதுவுமே செய்யவில்லை.

என்னதான் ரஜினிக்காக கூட்டம் வந்தாலும், இவர்கள் இரண்டு பேரால் தான் படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. அப்படி இருக்கும்பொழுது இவர்களை கூப்பிட்டு ஏதாவது ஒரு பரிசு தொகையை கொடுத்திருக்கலாம். முக்கியமாக அனிருத் இசை இப்படத்தில் எந்த அளவிற்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.

Also read: ரஜினியின் சிஷ்யனாய் இருந்தும், கமலை அசிங்கப்படுத்திய லாரன்ஸ்.. மொத்த சங்கதியும் வெளியான அம்பலம்

ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு அவரை வெறும் கருவேப்பிலை மாதிரி பயன்படுத்தி தூக்கி எறிந்து விட்டார். அதேபோல் வில்லனையும் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை. ஏதோ கடமைக்காக ரஜினி மற்றும் நெல்சனுக்கு காரை கொடுத்துவிட்டு அவர் வேலையை பார்க்க போய்விட்டார். இதெல்லாம் சரியா என்று ரசிகர்கள் பலரும் கேள்வியை முன்வைத்து வருகிறார்கள்.

அத்துடன் கலாநிதி மாறனின் இந்த செயலை பார்த்து ரசிகர்கள் பலரும் வலைதளங்களில் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர். இருப்பவர்களுக்கு கொடுப்பதை விட கஷ்டப்பட்டு முன்னேறி வர நினைக்கும் வில்லன் விநாயகத்துக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது. இது கொஞ்சம் கூட சரியே இல்லை என்று ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

Also read: தேரை இழுத்து தெருவில் விட்ட அட்லீ.. அக்கடதேசம் கூட்டிட்டு போய் அசிங்கப்படும் அனிருத்

Trending News