சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ஒரே படத்தில் ஒரேடியாக உயர்ந்த லோகேஷ், நெல்சனின் சம்பளம்.. இதுக்கு தான் பெரிய இடத்து சகவாசம் வைக்கணும் போல

Director Lokesh and Nelson: காலங்காலமாக எத்தனையோ பிரமாண்ட படங்களை கொடுத்து வந்த இயக்குனர்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கும் விதமாக தற்போது புது இயக்குனர்கள் முளைத்து வருகிறார்கள். அந்த வகையில் லோகேஷ் மற்றும் நெல்சன் சமீப காலமாக முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் பெரிய நடிகர்களின் கவனத்திற்கு சென்று விட்டார்கள்.

அதுவும் இந்த அதிரடியான மாற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்ததே இயக்குனர் லோகேஷ் தான். கமல்ஹாசன் என்னதான் முன்னணி ஹீரோவாக ஜொலித்திருந்தாலும் அவருடைய மார்க்கெட் டவுன் ஆகி தான் இருந்தது. அப்பொழுது உள்ளே நுழைந்து இவரை தூக்கி விட்டது லோகேஷ் தான். கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படத்தின் மூலம் கமல் மவுஸ் அதிகரித்துவிட்டது.

Also read: ஆடியோ லான்ச் வேண்டவே வேண்டாம்.. நியாயமாய் விஜய் கூறும் 5 விஷயங்களால் லோகேஷ்க்கு செக்

அத்துடன் லோகேஷ் உடைய பவரும் சினிமா உலகிற்கு புரிந்து விட்டது. அந்த வகையில் தற்போது வசூல் மன்னன் விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் எப்படியும் 1000 கோடி வசூலை அடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தையும் இயக்கப் போகிறார். இவரைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சனுக்கும் தற்போது ஜாக்பாட் அடித்து விட்டது.

அதாவது நெல்சன், விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்த பொழுது கலவையான விமர்சனத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள். ஆனாலும் வசூல் அளவில் பெரிய கல்லா கட்டியது. அந்த வழியில் கலாநிதி மாறன் நெல்சனை பயன்படுத்தி ரஜினியை வைத்து படத்தை எடுக்க வைத்தார். ஏனென்றால் அவருக்கு தேவை லாபம் மட்டுமே. அது கண்டிப்பாக நெல்சன் மூலம் கிடைத்துவிடும்.

Also read:ஜெயிலர் வெற்றியால் அடுத்தடுத்து நெல்சன் கூட்டணியில் உருவாகும் 5 படங்கள்.. தலைசுற்ற வைக்கும் சன் பிக்சர்ஸ் பட்ஜெட்

அதே நேரத்தில் ரஜினியையும் கோர்த்து விட்டால் நமக்கு தேவையானது கிடைத்துவிடும் என்பதால் பிளான் பண்ணி காய் நகர்த்தினார். இவர் எதிர்பார்த்தப்படியே நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 600 கோடி வசூலை பெற்று தற்போது வரை சில தியேட்டர் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இந்த இரண்டு இயக்குனர்கள் சினிமாவிற்குள் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே அனைவரும் பேசும்படியாக உயர்ந்து விட்டார்கள்.

அதனாலயே இவர்களுடைய சம்பளமும் தற்போது கிடுகிடுவென்று உயர்ந்து விட்டது. ஒரே படத்தின் மூலம் ஒய்யாரத்திற்குப் போன லோகேஷ்க்கு 60 கோடியாகவும், தாறுமாறாக ரஜினிக்கு வெற்றியை கொடுத்த நெல்சன் சம்பளம் இனி 55 கோடி உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் பெரிய இடத்து சகவாசம் தான். கமல், ரஜினி, விஜய் படங்களை இயக்கியதால் தான் இந்த இளம் இயக்குனர்களின் சம்பளம் உச்சத்தை தொட்டிருக்கிறது.

Also read: அட ரஜினி, விஜய் கையிலேயே இத்தனை படங்கள் இல்லையே.. கமல் லிஸ்டில் இருக்கும் 4 படங்கள்!

- Advertisement -spot_img

Trending News