LCU இல்லாத புதிய கூட்டணி.. அஜித்திற்கு வலை வீசும் சூப்பர் ஸ்டார்

Rajinikanth – Ajithkumar: தமிழ் சினிமாவில் சமீப காலமாக மல்டி ஸ்டார்ஸ் படங்கள் மீது நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அதிக ஆர்வம் வந்துவிட்டது. இந்த ட்ரெண்டை மீண்டும் கோலிவுட்டிற்கு கொண்டு வந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். தற்போது அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் எல்லாமே மல்டி ஸ்டார்ஸை வைத்து தான் எடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னணி ஹீரோக்களை ஒரே படத்தில் இணைத்து இயக்குவதோடு, அடுத்த கட்டமாக மற்ற மொழி நடிகர்களை தமிழில் நடிக்க வைப்பது என அடுத்தடுத்து கதைகளில் புதுமை செய்து வருகிறார்கள். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கூட மல்டி ஸ்டார்ஸ் ப்ளான் வொர்க் அவுட் ஆகி மிகப்பெரிய வெற்றியை பார்த்தது.

ரஜினிகாந்த்திற்கு மல்டி ஸ்டார் படங்கள் என்பது ஒன்றும் புதிதல்ல. அவர் வளர்ந்து வந்த காலத்திலேயே பிரபு மற்றும் சத்தியராஜ் போன்றவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதே நேரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இவர் இணைந்து நடித்த தளபதி படம் இன்று வரை தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறது. அதைத்தான் ஜெயிலர் படத்திலும் பாலோ செய்திருக்கிறார்.

தற்போது ரஜினி தன்னுடைய படத்தில் அஜித் குமார் இணைந்து நடிக்க வேண்டும் என்று பிளான் போட்டு இருக்கிறார். அஜித் மற்றும் ரஜினிகாந்த் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது என்பது இரு பெரும் துருவங்களை ஒரே நேரத்தில் பார்ப்பதற்கு சமம். இது மட்டும் நடந்து விட்டால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து விடும்.

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பிறகு அவருடைய 170 ஆவது படம் இயக்குனர் ஞானவேலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். அதேபோன்று 171 வது படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைகிறார். இந்த படத்திற்கு தான் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. லோகேஷ் உடன் இணைந்தாலும் ரஜினி இந்த படம் LCU கூட்டணியில் வரக்கூடாது என கட்டளையிட்டு இருக்கிறாராம்.

உலகநாயகன் கமலஹாசன் எப்படி தன்னுடைய விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு கேமியோ ரோல் கொடுத்தாரோ அதேபோன்று தலைவர் 171ல் நடிகர் அஜித்குமாரை நடிக்க வைக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது மட்டும் நடந்து விட்டால் இந்த படம் இந்திய அளவில் பெரிய வெற்றியை பெரும்.