100 Crore Collection: தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் தனி மவுசு உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு நடிகர்களுடைய படங்களை பார்ப்பதற்கு நீண்ட நாட்களாக ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி திரைக்கு வந்த படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தி வசூல் அளவில் முதல்முறையாக 100 கோடிக்கு மேல் கல்லாகட்டி இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று தற்போது பார்க்கலாம்.
எப்போதுமே சினிமாவிற்கு இவர் தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய ரஜினிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து வெற்றி பெற்ற படம் தான் சிவாஜி. இப்படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலக அளவில் 100 கோடிக்கும் மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது. அடுத்ததாக சினிமாவில் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தெரிந்து என்சைக்ளோபீடியா மற்றும் உலக நாயகனாக பெயர் வாங்கிய கமலஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படம் 100 கோடி லாபத்தை பெற்றது.
Also read: வெற்றிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.. என்னதான் சொகுசாக இருந்தாலும் ரஜினிக்கு இதுல கிடைக்க சுகமே வேற
அடுத்ததாக வசூல் நாயகனாக ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாக வலம் வரும் விஜய்யின் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் 100 கோடி வசூலை பெற்றது. இதற்கு அடுத்தபடியாக தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் மறு உருவமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளியான ஆரம்பம் திரைப்படம் 100 கோடி வசூலில் கல்லா கட்டியது.
இதனை அடுத்து எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்ற மாதிரி தன் உடலை வருத்திக் கொண்டு நடிப்பதில் விக்ரமுக்கு இணையாக வேறு யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படம் இவருக்கு 100 கோடி வசூலை பெற்றுக் கொடுத்தது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான ராஞ்சனா படம் இவருக்கு முதன் முதலில் நூறு கோடி வசூலை வசூலித்து கொடுத்தது.
Also read: சிம்புவிடம் ஒரு கோடி எடுத்து வைக்க சொன்ன தயாரிப்பாளர்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிபதி
அடுத்ததாக பல படங்களில் என்னதான் ஸ்டைலாக நடித்தாலும் பெருசாக வசூலை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டு வந்திருந்தார் நடிகர் சிம்பு. அந்த நேரத்தில் இவருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வெற்றி படத்தை கொடுத்தவர் தான் வெங்கட் பிரபு. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த மாநாடு படம் சிம்புவுக்கு முதன்முதலாக 100 கோடி வசூலை ஈட்டியது. அடுத்து விடாமுயற்சியால் முன்னுக்கு வந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக மாறி நூறு கோடி வசூலை கொடுத்தது.
இவர்களைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய சாதனை படமாக மாறியது. அப்படிப்பட்ட இந்த படம் முதன் முதலில் 100 கோடி வசூலை பெற்று கார்த்தியின் சாதனை படமாக மாறி இருக்கிறது. அடுத்தபடியாக நடிகர் விஷால் தொடர்ந்து தோல்வியை மட்டும் சந்தித்து வந்த நிலையில் தற்போது அவருடைய 46 வயதில் எட்ட முடியாத வெற்றியை பெற்றிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு சாதனை படைத்து வருகிறது.
Also read: மார்க் ஆண்டனி படத்தில் இணைந்து வெற்றி கண்ட 4 முரட்டு சிங்கிள்.. விநாயகரும் லிஸ்டில இருக்காரு!