திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அட்லிக்கு ஒரு டார்லிங்னா, நெல்சனுக்கு ஒரு செல்லாகுட்டி.. கடுப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன்

Nelson-Atlee-Sivakarthikeyan: அட்லி எப்பொழுதுமே மேடையில் பேசும்போது தனக்கு பிடித்த ஹீரோயின் ஒருவரை மட்டும் தாறுமாறாக புகழ்ந்து தள்ளி விடுவார். அதிலும் டார்லிங், ஸ்வீட்டி என்று போகும் இடமெல்லாம் இவரை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார்.

அவர் வேறு யாரும் கிடையாது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். பாலிவுட் செல்லும்போது கூட அட்லி தன் செல்ல அக்காவையும் கையோடு அழைத்து சென்ற கதை அனைவருக்கும் தெரியும். இவரைப் போன்று தான் நெல்சனுக்கும் ஒரு செல்லாக்குட்டி நடிகை இருக்கிறார்.

Also read: தட்டு தடுமாறிய ஜெயிலர்.. 18 நாளில் சாதித்து காட்டிய அட்லி, இனி ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது

டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா மோகன் தான் அவர். இதன் படபிடிப்பின் போதே சிவகார்த்திகேயனுடன் இவருக்கு அதிக நட்பு இருந்தது. அதனாலேயே டான் படத்திலும் இவர் நாயகியாக நடித்தார். இது கூட பல்வேறு விதமாக பேசப்பட்டது.

ஆனால் நெல்சன் இப்போது அந்த இடத்தை தட்டி சென்று விட்டாராம். தன்னை அறிமுகப்படுத்தியவர் என்ற அடிப்படையில் பிரியங்கா மோகன் இவரிடம் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் அபிப்பிராயம் கேட்பது மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஒருவராகவும் பழகி வருகிறார்.

Also read: இந்த ரெண்டு படங்களின் காப்பி தான் இந்தியன்.. அட்லியைத் தொடர்ந்து ஷங்கருக்கும் கிடைத்த அவப்பெயர்

அதை தொடர்ந்து இந்த நட்பும் வளர்ந்து வருகிறதாம். அதுவே கவின் படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அவர் திருமண நிகழ்வில் கூட பிரியங்கா கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த வகையில் நெல்சனின் நண்பர் தான் இப்படத்தை இயக்குகிறார்.

கவினும் இவர்கள் நட்பு வட்டத்தில் தான் உள்ளார். இப்படியாக இந்த படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்த பெருமை நெல்சனுக்கு உண்டு. இதனால் சிவகார்த்திகேயன் தான் இப்போது கொஞ்சம் கடுப்பில் இருப்பதாக காத்து வாக்கில் பேசப்பட்டு வருகிறது.

Also read: அட்லிக்கு குரு உச்சத்துல இருக்காரு.. 4 வருஷம் பட்ட கஷ்டம், மிரள வைக்கும் ஜவான் மொத்த கலெக்சன்

- Advertisement -

Trending News