வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கூல் சுரேஷை வச்சு செய்த ஆண்டவர்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க காரணம்

Bigg Boss Season 7: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்ற சேனல்களின் ஒட்டுமொத்த டி ஆர் பி ஐ க்ளோஸ் செய்து விட்டது. இந்த முறை பெரிய பிக் பாஸ், ஸ்மால் பாஸ் வீடு என இரண்டு வீடுகள் வைத்து ஆரம்பித்திலேயே சர்ச்சையை கிளப்பியதால் இந்த முறை பிக் பாஸ் பார்க்காதவர்கள் கூட இந்த சீசனை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவுக்கு கன்டென்ட் கொடுத்து வருகிறார்கள் போட்டியாளர்கள்.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் சாபக்கல் டாஸ்க் கொடுக்கப்பட்டபோது, கூல் சுரேஷ் அடுத்த வாரம் நான் வெளியேறி விடுகிறேன். கல்லை வைத்து எல்லாம் டாஸ்க் செய்வதாய் என்று நக்கல் ஆக பேசி இருந்தார். அவர் பேசியதின் விளைவா என்ன என்று தெரியவில்லை. அடுத்த நாளே ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்கென ஒரு டாஸ்க்கை கொடுத்து பிக் பாஸ் வீட்டை கலவரம் ஆக்கிவிட்டார்கள்.

மாயா கையில் சிலிண்டர் இருக்கும் பொழுது ஆண் போட்டியாளர்கள் அவரை தாக்கியது, பிரதீப்பை விஜய் வருமா தூக்கி போட்டு அடித்தது மற்றும் விஷ்ணுவின் கழுத்தை நெரித்தது என அத்தனையுமே இந்த டாஸ்க்கில் போர்க்களம் தான். இது போதாத குறைக்கு நேற்று யுகேந்திரன் போட்டிருந்த மிகப்பெரிய பிளான் வெளியே வந்து அவரை தலைகுனிய செய்தது மிகவும் வைரலானது.

சனிக்கிழமையான நேற்று வெளியான ப்ரோமோவில் எல்லோருக்கும் புரியும்படி கமலஹாசன் இந்த டாஸ்கை பற்றி பேசி இருந்தார். மேலும் விஜய் வர்மாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது அவர் மற்ற போட்டியாளர்களை தாக்கியதற்காகவா, அல்லது குறைந்த ஓட்டு எண்ணிக்கையில் வெளியேறுகிறாரா என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியும்.

இவங்க பிரச்சனையில் நம்மள மறந்துட்டாங்க என்று கூலாக இருந்தார் கூல் சுரேஷ். ஆனால் நான் எல்லாத்தையுமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என கண்களாலேயே மிரட்டி விட்டார் கமலஹாசன். ராசிபலன் சொல்கிறேன் என்ற பெயரில் கூல் சுரேஷ் பாடி ஷேமிங் செய்தது எல்லோருக்கும் தெரியும். இதற்காகத்தான் கமல் அவரிடம் கோபப்பட்டு இருக்கிறார்.

நீங்கள் இந்த வீட்டிற்கு வந்து ஒரு சில நாட்கள் தான் ஆகிறது. பாடி ஷேமிங் செய்து காமெடி செய்யும் அளவிற்கு யாரும் உங்களுக்கு உரிமை கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது நீங்கள் இப்படி செய்தது தவறு என கமல் சொல்லி இருக்கிறார். கூல் சுரேஷ் உடனேயே அந்த இடத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மேலும் ராசிபலன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மாயா அதை எதிர்த்து பேசியதற்கு கமல் அவரை பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

Trending News