புதன்கிழமை, நவம்பர் 27, 2024

மௌனம் பேசியதே படத்தின் முதல் ஹீரோ சூர்யா இல்லையாம்.. அமீரின் உருக்கமான பேட்டி

Actor Surya: நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கை மாற்றிய படங்கள் சில இருக்கின்றன. அதில் முக்கியமான படம் என்றால் மௌனம் பேசியதே தான். இந்த படத்தில் வரும் கௌதம் என்னும் கேரக்டர் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் ரொம்பவும் பிடித்த கேரக்டராக இருந்தது. மௌனம் பேசியதே படத்திற்கு பிறகு தான் சூர்யாவுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் சேர்ந்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் மௌனம் பேசியதே. காதலே வேண்டாம் என வெறுக்கும் ஒருவன் அந்த காதலால் எப்படி தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறான் என்பதே மையக்கதை. இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. த்ரிஷா முதன்முதலில் முன்னணி ஹீரோயினாக நடித்தது இந்த படத்தில் தான்.

Also Read:ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமீர்.. 16 வருஷமா துரோகிகளை படிக்க முடியல!

மௌனம் பேசியதே படத்தில் நடிக்க இருந்த ஹீரோ

சூர்யாவுக்கு சினிமா வாழ்க்கையை மாற்றிய படமாக இருக்கும் மௌனம் பேசியதே படத்தில் அமீர் முதலில் நடிக்க வைக்க இருந்த ஹீரோ வேறு ஒருவராம். ஆனால் ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சூர்யா நடித்ததாக அமீர் தன்னுடைய பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

சூர்யா நடித்த கௌதம் கதாபாத்திரத்தில் அமீர் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது நடிகர் விக்ரமை தான். ஆனால் விக்ரம் அப்போதுதான் சேது படத்தை கொடுத்து முதல் வெற்றியை பார்த்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு வெற்றி விக்ரமுக்கு கிடைத்திருந்தது. அது போன்ற ஒரு சமயத்தில் அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் சினிமாவில் காணாமல் போய்விடுவோமோ என்ற பயம் விக்ரமுக்கு இருந்திருக்கிறது.

விக்ரம் தான் அந்த படத்தின் ஹீரோ என அமீர் பிக்ஸ் செய்து வைத்திருந்தார். படத்தின் சூர்யாவின் நண்பராக நந்தா நடித்திருப்பார். முதலில் அந்த கேரக்டரில் சூர்யாவை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். விக்ரம் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றவுடன், அந்த கௌதம் கேரக்டர் சூர்யாவுக்கு கிடைத்திருக்கிறது.

Also Read:ரஜினிய சீண்டி பார்ப்பது முட்டாள்தனம், தெளிவான விளக்கம் கொடுத்த ஞானவேல்.. சரியான தலைவனா இத செய்யுங்க

 

 

 

 

 

 

 

- Advertisement -spot_img

Trending News