EVP Film City: நடிகர் சூர்யா நடித்து கொண்டிருக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் இது முதலில் நடக்கும் விபத்து இல்லை கிட்டத்தட்ட ஆறு கோர விபத்துக்கள் இதுவரை நடைபெற்று இருக்கிறது. உயிர்பலிகளும் அதிகம் ஏற்பட்டு இருக்கிறது.
இதுவரை நடந்த கோர விபத்துக்கள்
ஈவிபி இடம் முதலில் தீம் பார்க்காக தான் இருந்தது. அங்கே இருந்த ஆக்டோபஸ் ரைடில் பெண் ஒருவர் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்தக் கார் அறுந்து பத்து அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தது. காரின் பின் பாகம் அந்த பெண்ணின் தலையில் வேகமாக அடிக்க, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். விபத்து சம்பந்தப்பட்ட நிறைய பேரை கைது செய்து கேசை ஒரு வழியாக முடித்தார்கள். அதன் பிறகு தான் பார்க்கை மூடிவிட்டு அந்த இடத்தை சினிமாவுக்காக வாடகைக்கு கொடுக்க ஆரம்பித்தார்கள்.
Also Read:சூர்யாவுக்கு விபத்து நடந்தது இப்படித்தான்.. பதற வைத்த திக் திக் நிமிடங்கள்
இந்தியன் 2: 2019, பிப்ரவரி 19ஆம் தேதியை தமிழ் சினிமா உலகினரால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இந்தியன் 2 பட சூட்டிங்கின் போது கிரேன் அறுந்து விழுந்து மூன்று டெக்னீசியன்கள் உயிரிழந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். இந்த விபத்து நடந்த பிறகு அந்த படத்தின் சூட்டிங் மீண்டும் ஆரம்பிக்க கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
காலா: கடந்த 2017 ஆம் ஆண்டு காலா படத்திற்காக ஈவிபி ஃபிலிம் சிட்டியின் சுமார் ஐந்து கோடி மதிப்பிலான செட் போடப்பட்டது படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது மைக்கேல் என்பவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த ஒயரை தெரியாமல் மிதித்து விட அங்கேயே உயிரிழந்து விட்டார் ரஜினி மற்றும் பா. ரஞ்சித் அவருடைய குடும்பத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு பண உதவியும் செய்தார்கள்.
பிக்பாஸ் 2: 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இரண்டாவது தளத்தில் ஏசி மெக்கானிக் குணசேகரன் வேலை செய்து கொண்டிருக்கிறார். கால் தவறி கீழே விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். கமலஹாசன் வீகென்ட் எபிசோடில் குணசேகரனுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார்.
பிகில்: 2018 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பிகில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ஃபுட்பால் ஸ்டேடியம் போடப்பட்டிருந்தது. அப்போது கிரேனில் தொங்கவிடப்பட்டிருந்த கேமரா எலக்ட்ரீசியன் செல்வராஜ் தலையில் விழுந்து விட்டது. இதனால் அவருக்கு மிகப்பெரிய அடி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Also Read:எரிகிற நெருப்பில் குளிர் காய நினைக்கும் சூர்யா.. தம்பியாக இருந்தாலும் இதுதான் கெதி