வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நான் வெஜ்ஜை நிறுத்திட்டு சியர்ஸ் போடும் அஜித்.. மண்டையை பிய்த்துக் கொள்ளும் மகிழ் திருமேனி

Vidaamuyarchi: இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பொங்கல் கொண்டாட்டமாக அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து தான் அஜித் தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார். மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் துபாயில் நடைபெற்று, இப்போது அஜர்பைஜான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அஜித் உடன் ஆக்சன் கிங் அர்ஜுன், திரிஷா பிக் பாஸ் ஆரவ், சஞ்சய் தத் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். இதற்கிடையில் நடிகை திரிஷா திடீரென இந்தியா திரும்பி இருந்தார். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது அவர் ஐடென்டி என்னும் வலை தொடரில் நடித்து வருவதாகவும், அந்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காகத்தான் பிரேக் எடுத்துக் கொண்டு இந்தியா வந்ததாகவும் சொல்லப்பட்டது.

Also Read:2023 இல் கல்யாணம் பண்ணிக் கொண்ட 5 பிரபலங்கள்.. பெரிய இடத்து மருமகனான ஆதிக்

த்ரிஷாவை தொடர்ந்து நடிகர் அஜித்குமாரும் விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து பிரேக் எடுக்க இருக்கிறார். வரும் 31ஆம் தேதியோடு பிரேக் எடுத்துக்கொண்டு, ஜனவரி மாதம் பாதியில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அவருடைய மகளின் பிறந்தநாள் ஜனவரி 3ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அஜித் குடும்பத்துடன் லண்டன் செல்வது தான் இதற்கு காரணம்.

அஜித் போட்டிருக்கும் கண்டிஷன்

அஜர்பைஜான் நாட்டில் தற்போது தட்பவெப்ப நிலை ரொம்பவும் மோசமாக இருக்கிறது. இரவு நேரங்களில் கடுமையான குளிர் ஏற்பட்டு வருகிறது. இதனால் அஜித்குமார் படப்பிடிப்பை பகல் நேரங்களில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என இயக்குனர் மகிழ் திருமேனியிடம் சொல்லிவிட்டார் அஜித் மற்றும் த்ரிஷா எடுக்கும் பிரேக் பகல் நேர சூட்டிங் என மண்டையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.

நடிகர் அஜித்குமார் ஏற்கனவே குளிருக்கு இதமாக பட குழுவினருக்கு நான் வெஜ் சமைத்துக் கொடுக்கும் வீடியோ வைரலானது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் நிலவும் குளிரை சமாளிக்க நான் வெஜ் உடன் சேர்ந்து பாட்டிலும் கையும் ஆக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. தினமும் குளிரை சமாளிக்க அஜித்குமார் இரண்டு பெக் போட்டுக்கொண்டு அஜர்பைஜானில் சந்தோஷமாக இருந்து வருகிறார்.

Also Read:அஜித்துக்கு புடிச்சா எனக்கும் புடிக்கணுமா? முரண்டு பிடிக்கும் இயக்குனர்.. விடாமுயற்சிக்கு விடாமல் விழும் அடி

Trending News