Trisha Koovathur Issue: கடந்த வாரத்தில் இருந்து திரிஷாவின் பெயர் சோசியல் மீடியாவில் டேமேஜ் ஆகி அனைவருக்கும் ஹாட் டாபிக்காக அமைந்தது கூவத்தூர் சர்ச்சை தான். அதிமுக சேலம் ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு திரிஷாவை பற்றி அவதூறாக பேசிய வீடியோ ஒன்று வெளியானதிலிருந்து பிரச்சனை பூகம்பமாக வெடிக்க ஆரம்பித்தது.
ஆனால் இதற்கு த்ரிஷா உடனடி பதில் கொடுக்காமல் சைலண்டாக இருந்ததற்கான காரணம் என்னவென்று தற்போது வெளியாகிறது. அதாவது த்ரிஷா தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வருகின்ற தக் லைஃப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் முதற்கட்டமாக 5நாள் மட்டும் சென்னையில் சூட்டிங் வைத்து முடித்ததும் மொத்த பட குழுவும் செர்பியாவில் சூட்டிங் நடத்துவதற்காக போயிருக்கிறார்கள். அங்கே படத்திற்கான பாடல்களையும் மற்றும் மூன்று சண்டை காட்சிகளையும் எடுப்பதற்காக படக்குழு மும்மரமாக இருந்திருக்கிறது.
அதனால் மணிரத்தினம் அனைவருக்கும் போட்ட ஆர்டர் என்னவென்றால் எந்த காரணத்தை கொண்டும் ஒரு சின்ன விஷயம் கூட வெளியே லீக் ஆகக்கூடாது. அதனால் எல்லோருமே மொபைலை தயவு செய்து ஸ்விட்ச் ஆப் பண்ணி லாக்கரில் போட்டு வைக்க வேண்டும் என்று கண்டிஷனாக சொல்லி இருக்கிறார்.
அதனால் தான் த்ரிஷாவுக்கு இங்கே நடந்த கூவத்தூர் சர்ச்சை விஷயம் லேட்டாக தெரிந்திருக்கிறது. தெரிந்ததும் சும்மாவா விடுவாங்க, காற்றாறு போல் பொங்கி எழுந்து பதிலடி கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் த்ரிஷாவின் வக்கீல் இடம் சட்டரீதியாக இதை எப்படி டீல் பண்ணலாம் என்று அறிவுரையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டு 1கோடி அபதாரம் பெற வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்த விஷயத்தை அவ்வளவு எளிதாக சும்மா விடமாட்டார் கண்டிப்பாக நெருப்பாய் மாறி பூகம்பமாக வெடிக்க போகிறது.