30 வருட கனவு படத்தை கையில் எடுக்கும் கமல்.. ஆண்டவர் அமெரிக்கா போனதே அதுக்கு தானாமே!

Kamal Haasan: உலகநாயகன் கமலஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய போது அதற்காக பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்பதற்கு ஆதாரமாக இப்போது ஒரு விஷயம் வெளியாகி இருக்கிறது.

சூப்பரா ஒரு இயக்குனரை புடிச்சமா, அதுக்கு ஏத்த மாதிரி தயாரிப்பாளரை கவுத்தோமா, சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து 200 கோடி சம்பளமாக வாங்கினோமா என பலரும் இருக்கிறார்கள். அதில் கமலஹாசன் ரொம்பவே வித்தியாசம்.

அவர் தன்னுடைய படங்களை சோதனை களமாக பயன்படுத்துகிறார். அதாவது இன்னைக்கு அவருடைய படம் பொருளாதார அளவில் தோற்றாலும், இன்னும் 50 வருஷம் கழிச்சு தமிழ் சினிமால இதை எப்பவோ பண்ணிட்டாங்கன்னு அவருடைய படத்தை காட்டும் அளவுக்கு ஒரு லைப்ரரியை உருவாக்கி வருகிறார்.

அதில் அடுத்து இணைய போவது தான் அவருடைய கனவு படம். கமலுக்கு கனவு படம் என்று ஆயிரம் இருக்கும் இதில் எந்த படத்தை சொல்றாங்க என சந்தேகம் வரலாம். கமல் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மருதநாயகம் தான் அந்த படம்.

ஆண்டவர் அமெரிக்கா போனதே அதுக்கு தானாமே!

மருதநாயகம் என்ற பெயரை சொன்னதுமே நம்மில் பலருக்கு மெய் சிலிர்த்து விடும். அப்போதைக்கு தயாரிப்பாளர் யாருமே கிடைக்காததால் இந்த படம் கைவிடப்பட்டது. 1997 இல் தொடங்கி இன்று வரை கமலை பார்ப்பவர்கள் எல்லோருமே கேட்கும் கேள்வி மருதநாயகம் எப்போ சார் வரும்.

கமலின் ஒரே பதில் அந்த நமட்டு சிரிப்பு தான். சரி கமலே இதை கைவிட்டு விட்டார் போல நினைத்துக் கொண்டிருந்த போதுதான் சூப்பர் நியூஸ் ஒன்று வந்து சேர்ந்திருக்கிறது. அதாவது கமலஹாசன் அமெரிக்காவில் தங்கி 90 நாட்கள் AI கோர்ஸ் படிக்கிறார் என நமக்கு தெரியும்.

அவர் அதை படிப்பதற்கு காரணமே மருதநாயகம் படத்தை AI டெக்னாலஜி மூலம் எடுப்பதற்காகத்தான். பொருட்செலவில் எடுப்பதற்கு தான் தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள், தொழில்நுட்பம் என்று வரும்போது இந்த படத்தை ஈசியாக எடுத்துவிடலாம் என்பதுதான் கமலின் எண்ணம்.

கமல் நிலைத்திருந்தால் கதையை ஒரு குழுவிடம் கொடுத்து இதை AI டெக்னாலஜியில் எனக்கு உருவாக்கிக் கொடுங்கள் என சொல்லி இருக்கலாம். ஆனால் எதை செய்கிறோமோ அதை நாம் கற்று சரியாக செய்ய வேண்டும் என கமல் நிலைத்திருப்பது தான் பெரிய விஷயம்.

எத்தனையோ விஷயங்களுக்காக எதை எதையோ கற்றுக் கொள்ள நாம் தயங்கிக் கொண்டிருக்கிறோம். 60 வயதில் இதுதான் ட்ரெண்டு, இத கத்துக்கிட்டு தான் ஆகணும்னு எல்லாத்தையும் விட்டுட்டு, ஏன் பிக்பாஸில் கொடுக்கப்படும் 150 கோடி சம்பளத்தையே விட்டுவிட்டு கமல் படிக்கப் போய் இருப்பது நமக்கெல்லாம் ஒரு உதாரணம்.

Trending News

- Advertisement -spot_img