Karthi: கார்த்தி படங்களில் இருந்து நெட்டிசன்கள் கண்டுபிடித்திருக்கும் ஒரு புது செண்டிமெண்ட் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
பொதுவாக நடிகர்கள் நடிகைகள் பற்றி சினிமா படங்கள் பற்றி நெட்டிசன்கள் செய்யும் டி கோடிங் பெரிய ஷாக் ஆக இருக்கும்.
ஒரு படம் பார்த்துவிட்டு வந்த பிறகு இணையதளத்தில் இதைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள நாம் ஆர்வம் காட்டுவோம்.
படத்தின் இயக்குனருக்கே தெரியாத சில லாஜிக்குகளை எல்லாம் நமக்கு கண்டுபிடித்து சொல்வார்கள். அப்படித்தான் கார்த்தி படத்தை பற்றி ஒரு விஷயம் வெளியாகி இருக்கிறது.
புது சென்டிமென்ட்டை கண்டு பிடித்த நெட்டிசன்கள்!
இணையவாசிகளிடையே அதிக அளவு நெகட்டிவ் விமர்சனங்களை பெறாத நடிகர்கள் லிஸ்டில் எப்போதுமே கார்த்தி இருக்கிறார்.
கார்த்தியின் சினிமா கேரியரை கைதிக்கு முன் கைதிக்கு பின் என்று கூட பிரித்துக் கொள்ளலாம். தொடர் வெற்றிகளை கொடுக்கும் இவர் அவ்வப்போது தோல்வி படங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வெற்றி தோல்விக்கு எவ்வளவு காரணங்கள் இருக்கலாம். நெட்டிசன்கள் சொல்லும் காரணம் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது.
அதாவது கார்த்தி படத்தின் போஸ்டரில் அவர் நன்றாக வாயைத் திறந்து போஸ் கொடுத்திருந்தால் கண்டிப்பாக அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்குமாம்.
பருத்திவீரன், சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, சிறுத்தை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் கைதி போன்ற படங்களின் போஸ்டர்களில் கார்த்தி வாயை திறந்து கொண்டு இருப்பாராம்.
அதே நேரத்தில் தேவ், காற்று வெளியிடை, காஷ்மோரா, ஜப்பான், சகுனி படங்களின் போஸ்டரில் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்.
நெட்டிசன்கள் தாங்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய சென்டிமென்ட்க்கு இந்த போஸ்டர் இன் புகைப்படங்களை தான் ஆதாரமாக நிரூபித்திருக்கிறார்கள்.