Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பின்னால் மிகப்பெரிய திட்டம் இருக்கிறது என பிரபலம் ஒருவர் பேசியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக நகர்த்தியது அமரன் படம். இதன் பின் சிவகார்த்திகேயன் கிடைத்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள லாவகமாக காய் நகர்த்தி வருகிறார்.
அதில் ஒன்றுதான் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் பராசக்தி. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா என்று எல்லோருக்குமே தெரியும்.
இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தால் ஆளும் மத்திய அரசை எதிர்க்க வேண்டி வரும் இதனால் தன்னுடைய பான் இந்தியா படங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் சூர்யா விலகிக் கொண்டார்.
கொளுத்தி போட்ட பிரபலம்
அமரன் வெற்றிக்குப் பிறகு ஏதாவது சர்ச்சையான கதையில் நடித்தால் மாஸ் ஹீரோ ஆகிவிடலாம் என்பது சிவகார்த்திகேயனின் கணக்கு.
அதை தான் கட்சிதமாக பராசக்தி படம் மூலம் செய்திருக்கிறார் என்று சொல்லி இருப்பவர் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
அது மட்டும் இல்லாமல் போற போக்கை பார்த்தால் அரசியல் சாட்டையை திடீர் தளபதி கையில் கொடுத்துவிட்டு பழைய தளபதி மீண்டும் சினிமாவுக்கு வந்து விடுவார் போல என்று விஜய்யை வம்பு இழுத்திருக்கிறார்.