Actor Shri: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வார்கள் அப்படி ஒரு விஷயம் தான் நடிகர்கள் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
உச்சாணிக்கொம்பில் இருக்கும் ஹீரோக்கள் தெரிந்தோ தெரியாமலோ சில நேரங்களில் வளர்ந்து வரும் ஹீரோக்களை தட்டி விட்டு செல்வது உண்டு.
அதை பல வருடங்கள் கழித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நியாயம் கேட்டால் எப்படி இருக்கும், இப்படி ஒரு விஷயம் தான் வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த ஸ்ரீக்கு நடந்திருக்கிறது.
பயத்தில் சூர்யா, சிவகார்த்திகேயன்
கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் பேசு பொருளானவர் ஸ்ரீ. போதை பொருளுக்கு அடிமையாகி விட்டார், மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது என எக்கச்சக்க குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது.
இது அத்தனையையும் மொத்தமாய் களைந்து ஸ்ரீக்கு என்ன நடந்தது என்பதை போட்டு உடைத்தார் அவருடைய தோழி தோத்தி.
இதில் சிக்கியவர்கள் தான் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா, சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் அவருடைய நண்பராக நடிக்க ஸ்ரீக்கு கிடைத்த வாய்ப்பை சிவகார்த்திகேயன் பறித்து விட்டதாக செய்தி ஒன்று வெளியானது.
அதே மாதிரி சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர் ஸ்ரீக்கு சம்பளம் கொடுக்காததும் அவருடைய இந்த மன உளைச்சலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவை பொருத்தவரைக்கும் மக்கள் நடிப்பு வேறு சொந்த வாழ்க்கை வேறு என்று பார்ப்பது இல்லை.
நடிகர் ஸ்ரீயின் இந்த நிலைமைக்கு காரணம் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் தான் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இதனால் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கும் இவர்களுடைய ரெட்ரோ மற்றும் பராசக்தி படங்களில் பெரிய அளவில் அடி விழ வாய்ப்பிருக்கிறது.
அதிலும் அடுத்த மாதமே ரிலீஸ் ஆக இருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்தை குறிவைத்து ஒரு கூட்டம் சமூக வலைத்தளத்தில் ஸ்ரீக்கு நியாயம் வேண்டுமென செய்திகள் பரப்பி வருகிறார்கள்