Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கே ஜி எஃப்-2 இயக்குனரை சந்தித்தாரா விஜய்? வெளிவந்த பரபரப்பான உண்மை

கே ஜி எஃப்-2 இயக்குனரை சந்தித்தாரா விஜய்? வெளிவந்த பரபரப்பான உண்மை

இளைய தளபதி விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படமானது வரும் ஏப்ரல் 13ஆம் தேதி கோடை கொண்டாட்டத்திற்காக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக ரிலீஸாகவுள்ளது. இதற்காக தளபதி ரசிகர்கள் […]

இளைய தளபதி விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படமானது வரும் ஏப்ரல் 13ஆம் தேதி கோடை கொண்டாட்டத்திற்காக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக ரிலீஸாகவுள்ளது. இதற்காக தளபதி ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர்.

ஆனால் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கே ஜி எஃப்-2 திரைப்படமானது வெளியாக உள்ளது. இவ்வாறு திரையரங்கில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் கே ஜி எஃப்-2,  பீஸ்ட் ஆகிய 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இன்னிலையில் விஜய் கடந்த மாதம் நிறைய பெரும் புள்ளிகளை சந்தித்திருக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டது. அதில் பிரசாந்த் நீல் அவர்களை விஜய் சந்தித்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் விஜய் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை சந்தித்து பேசிய எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

ஆனால் விஜய், கே ஜி எஃப்-2 இயக்குனர் பிரசாந்த் நீல்லை சந்தித்திருக்கிறார் என்ற செய்தி தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஒருவேளை அப்படி விஜய், பிரசாந்த் நீல்-லை சந்தித்திருந்தால் அடுத்த படத்திற்கு எதுவும் கதை கேட்டுள்ளார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

இருப்பினும் பிரசாந்த் நீல் மற்றும் விஜய் இருவரது சந்திப்பு குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் விஜய் ஏற்கனவே கேஜிஎஃப் திரைப்படம் போல் ஒரு படம் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்.

ஒருவேளை அந்த ஆசையை நிறைவேற்றும் விதத்தில் பிரசாந்த் நீல்லை சந்தித்து இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அத்துடன் பிரசாந்த் நீல்லும் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியான போது அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு பிரசாந்த் நீல் மற்றும் விஜய் இருவரின் கூட்டணியில் அடுத்த படம் உருவானால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.