ஆஸ்கார் குழுவால் மறுக்கப்பட்ட கமலின் 5 படங்கள்.. விளிம்பு வரை சென்று திரும்பிய ஹேராம்!

Kamal Haasan: கமலஹாசன் ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் இணைய அவருக்கு அழைப்பு வந்திருப்பது ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் மிகப்பெரிய பெருமை. ஆனால் உண்மையில் இது கமலுக்கு ரொம்பவும் காலதாமதமாக நடந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

உலக அரங்கில் நடிகர்கள் பெரிய அளவில் கௌரவிக்கப்படும் ஆஸ்கார் விருது விழாவுக்காக இதுவரை ஐந்து கமல் படங்கள் அனுப்பப்பட்டன. இதில் விருது வாங்குவதற்கு முழு தகுதியுடன் இருக்கும் இந்த படங்கள் கடைசி நிமிடத்தில் நிராகரிக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் படங்கள்

நாயகன்: ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்ட முதல் கமல் படம் மணிரத்னம் இயக்கத்தின் 1987 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன நாயகன்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிரதி பிம்பமாக இன்று வரை இருக்கும் இந்த படம், 1969 ஆம் ஆண்டு முதன் முதலாக சிவாஜியின் தெய்வமகன் ஆஸ்கார் தேர்வுக்கு அனுப்பப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தேர்வானது.

தேவர் மகன்: நடிப்பு அரக்கர்கள் சிவாஜி மற்றும் கமலஹாசன் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது தேவர் மகன்.

தேசிய விருது வென்ற இந்த படத்தின் திரைக்கதையை கமலஹாசன் வெளிநாடுகளில் உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரே வாரத்தில் எழுதி முடித்திருக்கிறார். இந்த படமும் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி பின்னர் நிராகரிக்கப்பட்டது.

குருதிப்புனல்: கமலஹாசன் மற்றும் அர்ஜுன் கூட்டணியில் 1995 ஆம் ஆண்டு குருதிப்புனல் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பிசி ஸ்ரீராம் இயக்கியிருந்தார்.

ஹாலிவுட் படத்திற்கான எல்லா தரமும் இந்த படத்தில் இருந்த போதும் ஒரு சில காரணங்களால் ஆஸ்கார் குழுவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்தியன்: கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட அளவில் உருவாக்கப்பட்ட படம் இந்தியன் இந்த படம் கமலுக்கு மிகப்பெரிய வசூல் படமாக அமைந்தது.

இந்த படத்தில் அப்பா அம்மாவாக நடித்த கமல் மற்றும் சுகன்யாவுக்கு போடப்பட்ட ப்ராஸ்டெட்டிக் மேக்கப் முதன் முதலில் இந்திய சினிமாவில் இதில் தான் உபயோகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த படமும் ஆஸ்கார் விருது விழாவில் தேர்வாகவில்லை.

ஹேராம்: கமலஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்து அவரே வசனம் எழுதிய படம் ஹேராம். இந்த படத்தில் கமலுடன் ஷாருக்கான் இணைந்து நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு ஏறக்குறைய ஆஸ்கார் விருது உறுதி செய்யப்பட்டது என்றே பேசப்படுகிறது. ஏனென்றால் படத்தின் கதைக்களம் அப்படியானது. இருந்தாலும் ஒரு சில காரணங்களால் இந்த படம் அந்த விருதை பெறவில்லை.

கமலுக்கு ஆஸ்கார் விருதுதான் கிடைக்கவில்லையே தவிர அதை தாண்டி எல்லா பெருமைகளையும் பெற்று விட்டார்.

தசாவதாரம் படத்தில் கே எஸ் ரவிக்குமார் ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும் ஆக்சிஜன் குறைவதில்லை, சொன்னால் கேள் ஆஸ்கார் தூரம் இல்லை என்று எழுதி இருப்பார். அது தற்போது நிதர்சனமான உண்மையாக மாறி இருக்கிறது.