கிசுகிசு விரும்பி படிப்பவரா நீங்கள்?. அப்போ இந்த 6, 90ஸ் நடிகைகளின் ‘நிக்நேம்’ என்னனு தெரிஞ்சுக்கோங்க!

Gossip News: பொதுவாக சினிமாவை தாண்டி சினிமா நடிகர்களின் சொந்த வாழ்க்கையை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் இருக்கும்.

இதற்கு தீனி போடுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் கிசுகிசு செய்திகள். சில நேரங்களில் நடிகர் நடிகைகளின் பெயரை சொல்லாமல் மறைமுக பெயரை வைத்து செய்திகள் எழுதுவது உண்டு.

அந்த நேரத்தில் யார் இந்த நடிகர் நடிகைகள் என தலையைப் பிடித்துக் கொண்டு யோசிக்கும் நிலைமையும் ஏற்படும்.

அந்த மாதிரி தேடுபவர்களுக்கு ட்ரெண்டான 6 நடிகைகளின் நிக் நேம் என்ன என இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகைகளின் ‘நிக்நேம்’

த்ரிஷா: நயன்தாராவின் வருகைக்கு முன் வரை நம்பர் நடிகை என த்ரிஷாவை எழுதுவார்கள். அதன் பின்னர் 3ஷா என அறியப்பட்டார்.

பெயருக்கு முன்னால் திரி என்று இருப்பதால் பட்டாசு நடிகை, சாமி படத்தில் நடித்த பிறகு மாமி நடிகை என்றெல்லாம் அவரைப் பற்றி எழுத ஆரம்பித்தார்கள்.

நயன்தாரா: கிசுகிசு எழுதுபவர்களுக்கு எக்கச்சக்க கன்டென்டுகளை அள்ளித் தெளித்தவர்தான் நயன்தாரா. நம்பர் நடிகை என்று ஒரு கிசுகிசு வந்தாலே அது நயன்தாராவை பற்றியதுதான் என 100% எல்லோருக்கும் தெரிந்து விடும்.

ஜோதிகா: நடிகை ஜோதிகாவை பற்றி கிசுகிசு வருவது என்பது அரிதிலும் அரிது. சூர்யா மற்றும் ஜோதிகா காதலித்து வந்த காலத்தில் அவருடைய பெயரின் அர்த்தத்திலேயே ஒளி நடிகை என்று அவரை சொல்வதுண்டு. தற்போது உருளைக்கிழங்கு நடிகை என்று கூட எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.

சிம்ரன்: சிம்ரன் 2000 கால கட்டத்தில் அதிக அளவு கிசுகிசுகளுக்கு தீனி போட்டவர். அந்த நேரத்தில் அவரை இடுப்பழகி நடிகை என்று குறிப்பிடுவது உண்டு.

அதே மாதிரி டான்ஸ் நடிகை என்று எழுதினாலும் அது சிம்ரன் தான் என்பது பலருக்கும் தெரியும்.

சினேகா: நடிகை சினேகா வளர்ந்து வரும் காலகட்டத்தில் புன்னகை அரசி என அவருக்கு பட்டம் கொடுத்தார்கள். புன்னகை அரசி நடிகை, சிரிப்பு நடிகை, சினேகமான நடிகை என கிசுகிசு ஆரம்பித்தாலே அது சினேகாவை பற்றியதாகத்தான் இருக்கும்.

இது மட்டும் இல்லாமல் நடிகை ரம்பாவுக்கு தொடை அழகி, மீனாவுக்கு கண்ணழகி என்ற பெயர்களை வைத்ததும் உண்டு. சரத்குமாரை ஆறடி நடிகர், பாடி பில்டர் என்று எழுதுவது உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கு ஸ்டார் நடிகர் என்று குறிப்பிடுவது உண்டு. அதே மாதிரி குஷ்பூவுக்கு பூ நடிகை என்று எழுதுவது உண்டு.

தனுஷுக்கு ஒரு காலகட்டத்தில் புரூஸ்லி என்ற பெயர் இருந்தது. அதே மாதிரி தற்போது சிவகார்த்திகேயனை திடீர் தளபதி என ரொம்பவும் வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.