Andrea: ஒரு படத்தை எடுத்து முடிப்பது, ஒரு வீட்டை கட்டி முடிப்பது இரண்டுமே ஒன்றுதான் என சினிமா தயாரிப்பாளர்கள் சொல்வதுண்டு. நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அத்தனை பேரையும் ஒன்று கூட்டி, எதிர்பார்த்த பணத்தை திரட்டி ஒரு படம் எடுத்த முடிப்பது அவ்வளவு சாத்தியமில்லை.
படம் முடிந்த பிறகு அதை ரிலீஸ் செய்வதற்கும் படாத கஷ்டம் பட வேண்டும். எவ்வளவு கஷ்டப்படும், முட்டி மோதியும் ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் படங்களும் இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
மாளிகை: ஆண்ட்ரியா மற்றும் கார்த்திக் ஜெயராம் நடிப்பில் உருவான படம் தான் மாளிகை. இந்த படத்தில் ஆண்ட்ரியா போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார்.
மேலும் பூர்வ ஜென்மத்தில் மாளிகை ஒன்றின் ராணியாக அவர் பிறந்து வளர்ந்த பிளாஷ்பேக் காட்சிகளும் இருக்கும். இந்த படத்தை ஒரு வழியாக இந்தியில் ரிலீஸ் செய்து விட்டார்கள். ஆனால் தமிழில் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.
தி சேஸ்: பிக் பாஸ் புகழ் ரைசா முக்கிய கேரக்டரில் நடித்த படம் தான். 2021 ஆம் ஆண்டு இந்த படத்தில் டிரைலர் யூடியூபில் வெளியானது. ரிலீஸ் தேதி வரை முடிவான பின்னரும் ஒரு சில காரணங்களால் நான்கு வருடங்களாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.
விண்ணோடும் முகிலோடும்: டாப் ஸ்டார் பிரசாத் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த காலகட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட பணம் தான் விண்ணோடும் முகிலோடும்.
இந்த படத்தை சேரன் இயக்கியிருந்தார். தேவாவின் இசையில் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.
டைடானிக்: காதலும் கவுந்து போகும்: கலையரசன் மற்றும் ஆனந்தி கெமிஸ்ட்ரியில் 2020 ஆம் ஆண்டு உருவான படம்டைடானிக்: காதலும் கவுந்து போகும். படத்தின் டிரைலர் வெளியான நிலையில், படத்தைப் பற்றிய எந்த தகவலும் மீடியாக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்: சன் மியூசிக் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் ஹீரோவாக நடித்த படம் இத்தனை நாளாய் எங்கிருந்தாய். இந்த படத்தில் அவள் பெயர் தமிழரசி படத்தில் ஹீரோயினாக நடித்த மனோ சித்ரா கதாநாயகியாக நடித்திருந்தார்.
மறைந்த சின்ன கலைவாணர் விவேக் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். எனினும் இந்த படம் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
கண்ணாடி: இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்த படம் கண்ணாடி. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாரானது.
மேலும் சந்திப் கிஷன் இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாவதாகவும் இருந்தது. ஆனால் படத்தின் தெலுங்கு பதிப்பு மட்டுமே 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.