40 வயதாகியும் தாலியை பார்த்தா தெறித்து ஓடும் 6 ஆன்டி நடிகைகள்.. கிரிக்கெட் வீரரை நம்பி மோசம் போன ராய் லட்சுமி

நடிகைகளில் சிலர் திருமணம் ஆகாமலேயே தங்களின் வாழ்நாள் கழித்து விடுகிறார்கள். இது இப்போது என்றில்லை, 60, 70 களிலேயே சில நடிகைகள் திருமணம் ஆகாமல் இருந்து இருக்கிறார்கள். சில நடிகைகள் மார்க்கெட் நன்றாக இருப்பதால் திருமணத்தை பற்றி யோசிக்காமல் இருந்து விடுகிறார்கள். சிலருக்கு காதல் தோல்வி குடும்ப பிரச்சனை என நிறைய காரணங்கள் இருக்கின்றன.

நித்யா மேனன்: தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார் நடிகை நித்யா மேனன். ரொம்பவும் சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 34 வயதாகியும் இவர் திருமணம் செய்யவில்லை.

சுனைனா: சுனைனா தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் நடிகர்கள் நகுல், கிருஷ்ணாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். 33 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

லட்சுமி ராய்: மாடலிங் துறையிலிருந்து நடிக்க வந்தவர் லட்சுமி ராய். 2004ல் இருந்து தமிழ் சினிமாவில் இருந்தாலும் 2008ல் வெளியான தாம் தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் முன்னாள் காதலி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். 33 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை.

அஞ்சலி: தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர். கற்றது தமிழ், அங்காடி தெரு போன்ற படங்கள் இவருடைய சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டு. எந்த பட வாய்ப்புகளும் இல்லாத அஞ்சலிக்கு 36 வயதாகியும் திருமணம் ஆகவில்லை.

ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா பின்ணணி பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பன்முக திறமை கொண்டவர். ரொம்பவும் எதார்த்தமாக நடிக்க கூடிய நடிகைகளில் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். இவருக்கு 36 வயதாகியும் திருமணம் ஆகவில்லை.

‘பூ’ பார்வதி: 2006 ஆம் ஆண்டு ரிலீசான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உபயோகிக்காமல் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடிப்பவர். இதுவரை இவர் எந்த சர்ச்சையிலும் சிக்கியதில்லை. 36 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.