ஒட்டுமொத்த மும்பையையும் உருவாக்கிய தேசிய விருது இயக்குனர்.. கமலே வியர்ந்து பார்த்த படம்

சினிமாவை பொறுத்தவரைக்கும் கலை வேலைப்பாடுகள் என்பது ரொம்பவும் முக்கியம். பொதுவாக எல்லா இடங்களுக்குமே சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது கால விரையம் மற்றும் படத்தின் பட்ஜெட்டுக்கு ஒத்துவராத ஒன்று. அதுபோன்ற நேரங்களில் மிகப்பெரிய உறுதுணையாக இருப்பவர்கள் தான் கலை இயக்குனர்கள்.

இவர்கள் நினைத்தால் எதையும் கண் முன்னால் கொண்டு வந்துவிடுவார்கள். சினிமாவில் நாம் பார்க்கும் பல விஷயங்கள் நிஜமானது இல்லை. ஜெயில், மருத்துவமனை, வீடுகள் , பெரிய கட்டிடங்கள் உண்மையாகவே தத்ரூபமாக அமைத்து விடுகிறார்கள் கலை இயக்குனர்கள். எது உண்மை எது செட்டிங்க்ஸ் என யாராலுமே கண்டுபிடிக்க முடியாது.

கோலிவுட்டில் பல கலை இயக்குனர்கள் இருந்தாலும் அதில் முதன்மையாக இருப்பவர் தான் தோட்டா தரணி. இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் இதுவரை தன்னுடைய கலை வடிவமைப்புக்காக இரண்டுமுறை தேசிய விருது வாங்கியிருக்கிறார். மேலும் இவர் நந்தி விருது, மாநில விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

சினிமாவில் ஒரு சின்ன குண்டூசியில் கூட பெர்பெக்சன் பார்ப்பவர் தான் உலக நாயகன் கமலஹாசன். இவரிடம் வேலை பார்ப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். அப்படிப்பட்ட உலகநாயகனுக்கே தண்ணி காட்டியவர் தான் கலை இயக்குனர் தோட்டா தரணி. கமலஹாசனின் நாயகன் மற்றும் இந்தியன் திரைப்படத்திற்கு தான் இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

கமலின் கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது நாயகன் தான். மணிரத்தினத்தின் இயக்கத்தில் கமல் நடித்த இந்த படம் மும்பையை தழுவிய கதை. ஆனால் இந்த படத்தின் ஒரு காட்சி கூட மும்பையில் எடுக்கப்படவில்லை. இந்த படத்திற்காக ஒட்டுமொத்த மும்பை செட்டிங்கையும் சென்னையிலேயே போட்டு சூட்டிங் நடத்தி இருக்கிறார்கள்.

அதுபோலத்தான் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தின் கிராமத்து வீடும் தோட்டா தரணியின் கை வண்ணத்தில் உருவானது தான். இந்த வீடு உலகநாயகன் கமலஹாசனுக்கு ரொம்பவும் பிடிக்குமாம். தோட்டா தரணியின் கலை வண்ணத்தை பார்த்து கமலே மிரண்டு போய்விட்டாராம். 70 வயதை தாண்டிய தோட்டா தரணி இன்றும் கோலிவுட்டில் நம்பர் ஒன்னாக இருக்கிறார்.