இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா இதுவரை தமிழ் சினிமாவில் 175 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஊர்காவலன் என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் இவர்தான். இயக்குனராக இருந்தும் நிறைய படங்களில் காமெடியனாகவும் இவர் நடித்து பெயர் பெற்றிருக்கிறார். இவருடைய உடல் அமைப்பு மற்றும் உடல் அசைவு போன்றவையே ஒரு காமெடி சீனுக்கு போதுமானதாக இருக்கும். நிறைய படங்களில் ஒரு சீனுக்கு வந்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நின்று விடுவார்.
பிதாமகன்: பாலா இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா நடித்த படம் பிதாமகன். இதில் நடிகர் சூர்யா ஏமாற்றுப் பேர் வழியாக ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். அவை ரசிக்கும்படி அமைந்திருக்கும். அதில் சூர்யாவுடன் கருணாஸ் மற்றும் மனோபாலாவும் இருப்பார்கள். இந்த படத்தில் லைலாவை ஏமாற்றும் காட்சிகளில் மனோபாலாவின் வசனம் மற்றும் அவருடைய உடல் அசைவு தானாகவே சிரிப்பு வந்துவிடும்.
தலைநகரம் : இயக்குனர் சுந்தர் சி முதன் முதலில் ஹீரோவாக நடித்த படம் தலைநகரம். இதில் முழுக்க முழுக்க வடிவேலுவின் காமெடி ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதில் ஒரு காட்சியில் வடிவேலுவை பெரிய குற்றவாளி என நினைத்து கைது செய்யும் போலீசாக மனோபாலா நடித்திருப்பார். இவர்கள் இருவருக்குள்ளும் அந்த விசாரணையின் போது நடக்கும் உரையாடல் ரொம்பவும் பிரபலமானது.
கலகலப்பு: சுந்தர் சி இயக்கத்தில் விமல் மற்றும் மிர்ச்சி சிவா நடித்த படம் கலகலப்பு. இதில் சந்தானம் மெயின் காமெடியனாக நடித்திருப்பார். ஒரு காட்சியில் அஞ்சலியை கடத்திக் கொண்டு போகும் விமலை சந்தானம் துரத்திக் கொண்டு போவார். அப்போது அந்த ஊரில் சந்தானத்திற்கு எதிரியாக இருக்கும் மனோபாலா சந்தானத்தின் காரை துரத்திக் கொண்டு போவார். இதில் மனோபாலாவின் ரியாக்சன்கள் மற்றும் மனோபாலாவை பற்றி கமெண்ட் அடிக்கும் சந்தானத்தின் வசனங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.
காக்கிச்சட்டை: நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த திரைப்படம் காக்கிச்சட்டை. காமெடி கலந்த சீரியஸ் கதைக்களத்தில் செல்லும் இந்த படத்தில் மனோபாலா ஜோதிலிங்கம் எம்எல்ஏவாக நடித்திருப்பார். சிவகார்த்திகேயனுக்கு இணையாக காமெடியில் அசத்தியிருப்பார் இவர்.
மாப்பிள்ளை: தனுஷ், ஹன்சிகா மோத்வானி, மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான படம் மாப்பிள்ளை. இந்த படம் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை படத்தின் கதை சாயலை கொண்டது. இந்த படத்தில் மனோபாலா போலி சாமியாராக காமெடியில் கலக்கியிருப்பார்.