ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு பெண் வேடத்தில் நடித்த 5 நடிகர்கள்.. ஜெமினியை காதலிக்க தூண்டிய சண்முகி

Five Actors Played Female Roles: பொதுவாக பெரிய ஹீரோக்கள் பெண் வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். ஏனென்றால் அதன் பிறகு தங்களது மார்க்கெட் போய்விடும் பயத்தில் இவ்வாறு செய்கிறார்கள். அதையும் மீறி பெண் வேடத்தில் நடித்து பெயர் வாங்கிய ஹீரோக்களும் இருக்கிறார்கள். அவ்வாறு உள்ள ஐந்து நடிகர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரசாந்த் : ஒரு காலகட்டத்தில் மிகவும் பிசியான நடிகராக வளர்ந்து கொண்டிருந்தவர்தான் பிரசாந்த். இந்நிலையில் இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ஆணழகன். இந்த படத்தில் கதாநாயகிகளை பொறாமைப்படும் அளவிற்கு கொள்ளை அழகுடன் பெண் வேடத்தில் பிரசாந்த் நடித்திருந்தார்.

விக்ரம் : விக்ரம் நடிப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர். அந்த வகையில் விக்ரமும் பெண் வேடம் இட்ட நடித்து இருக்கிறார். அதாவது விக்ரம், ஸ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் வெளியான கந்தசாமி படத்தில் சில காட்சிகளில் பெண் வேடத்தில் விக்ரம் நடித்திருந்தார். இதில் பெண் போலவே பிசிறு தட்டாமல் அந்த காட்சியில் நடித்திருந்தார்.

சரத்குமார் : இப்போது சரத்குமார் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கிய நிலையில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான போர் தொழில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தில் சரத்குமார் பெண் வேடமிட்டு நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் : தனக்கே உண்டான ஸ்டைலில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்தான் சிவகார்த்திகேயன். இந்நிலையில் ரெமோ படத்தில் நர்சாக சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்திருந்தார். இதில் துளி கூட ஆண் என்ற சந்தேகம் வராத அளவுக்கு பெண் போலவே காட்சியளித்திருந்தார்.

கமலஹாசன் : உலகநாயகன் கமலஹாசன் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே மாறிவிடுவார். அப்படிதான் அவ்வை சண்முகி படத்தில் அவர் பெண்வேடமிட்டு நடித்திருந்தார். இதில் அவ்வை சண்முகி பார்த்து ஜெமினிகணேசனே ஜொல்லுவிட்டிருப்பார். அந்த அளவுக்கு யதார்த்தமாக பெண் வேடம் கமலுக்கு பொருந்தி இருக்கும்.