இளமையில் நடிக்க தொடங்கி, சரியான பாத்திரங்கள் அமையாமல் தனது 64 வது வயதில் காமெடி, குணச்சித்திரம் என இரு பரிணாமங்களில் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். இவர் நடிகை வடிவுக்கரசியின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
சிறந்த குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத் திறமை கொண்ட இவர், நடித்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகர் கமல், பிரபு இருவரிடமும் பயங்கரமாக திட்டு வாங்கி உள்ளார். இந்த செய்தி தற்போது ரசிகர்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
வயதில் மூத்தவர் என்று கூட பார்க்காமல் எம்எஸ் பாஸ்கரை கூப்பிட்டு பிரபு திட்டு விட்டாராம். ஏனென்றால் எம்எஸ் பாஸ்கர் ‘குரு என் ஆளு’ படத்தில் சிவாஜி மாதிரி நடித்து அவரை அசிங்கப்படுத்தி இருப்பார். ‘அத்தனையும் நடிப்பா’ என்ற வசனத்தை சிவாஜி போல் பேசி நடித்திருப்பார்.
இதனைப் பார்த்து பிரபு கோபமடைந்து, அசிங்கப்படுத்தியதால் வந்த ஆவேசத்தில் எம்எஸ் பாஸ்கரை அழைத்து திட்டி உள்ளார். அதற்கு எம் எஸ் பாஸ்கர், ‘சிவாஜி சார் உங்களுக்கு மட்டும் அப்பா இல்லை, எனக்கும் அப்பா தான்’ என்று சமாதானப்படுத்தினாராம். அதேபோல் கமலஹாசனும் எம்எஸ் பாஸ்கரை ஆபீஸுக்கு அழைத்து ‘சாகப் போறியா!’ என்று திட்டி உள்ளாராம்.
2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பட்டாபியாக நடித்த எம்எஸ் பாஸ்கர், உடம்பு முழுவதும் தங்க நிற பெயிண்ட் பூசிக் கொண்டாராம். அப்படி நடிக்கிறது ஆபத்து என்று கமல் எம்எஸ் பாஸ்கரை திட்டி விட்டாராம்.
ஏனென்றால் உடம்பில் பெயிண்ட் அடித்தால் வியர்வை துவாரங்கள் அடைப்பு ஏற்பட்டு, பிரச்சினை உருவாகிவிடும் என்று கமல் அக்கறையுடன் கலந்த அறிவுரையை எம்எஸ் பாஸ்கருக்கு வழங்கினாராம். இப்படி சினிமாவில் வெறித்தனமாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எம்எஸ் பாஸ்கர் செய்த ஒரு சில செயல் கமல், பிரபு போன்ற பிரபலங்களின் பார்வையில் பட்டு அவர்கள் கூப்பிட்டும் திட்டும் அளவுக்கு ஆகியுள்ளது.