Kamal Haasan – Manoramma: ஆச்சி மனோரமா எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதை அப்படியே வாழ்ந்து காட்டுபவர். இவரை நடிகையர் திலகம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய பன்முக திறமை கொண்ட நடிகை. இவருக்கு காமெடி காட்சிகளாக இருக்கட்டும், அல்லது சென்டிமென்ட் காட்சிகளாக இருக்கட்டும் ஒரு சில நடிகர்களுடன் சட்டென செட் ஆகி விடும். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான் கமலஹாசன். கமல் மற்றும் மனோரமா இணைந்து நடித்த இந்த 6 படங்கள் எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்.
அபூர்வ சகோதரர்கள்: கமல் மற்றும் மனோரமா கூட்டணியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இதில் ராஜா கைய வச்சா பாடலில் இவர்கள் இருவரும் இணைந்து பாடி இருப்பது இன்று வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த கேரக்டரில் முதன் முதலில் காந்திமதியை நடிக்க வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, இறுதியில் இது போன்ற ஒரு கேரக்டரில் மனோரமா நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று கடைசி நேரத்தில் கமல் மனோரமாவை மாற்றினார்.
சவால்: கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் ஆயிரத்து 1981 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் சவால். இந்தப் படத்தில் மனோரமா பர்மா பாப்பா என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். அவர் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து, தலை முடி வரை முற்றிலும் பர்மாவை சேர்ந்த பெண்களைப் போல் இருக்கும். கமல் மற்றும் மனோரமா காம்போவில் இந்த படத்தின் காமெடி காட்சிகள் ரசிக்கும் படி இருக்கும்.
வாழ்வே மாயம்: உலகநாயகன் கமலஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது தான் வாழ்வே மாயம். இந்த படத்தில் ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீபிரியா இணைந்து நடித்திருந்தனர். ஆச்சி மனோரம்மா பேபி என்னும் கேரக்டரில் விமான பணி பெண்ணாக இந்த படத்தில் நடித்திருப்பார். இவர் வரும் காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
பேர் சொல்லும் பிள்ளை : இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் கமலஹாசன், ராதிகா, கே ஆர் விஜயா, கவுண்டமணி, ரம்யா கிருஷ்ணன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவான திரைப்படம் தான் பேர் சொல்லும் பிள்ளை. இந்த படத்தில் மனோரமா சமையல்கார முனியம்மா கேரக்டரில் நடித்திருப்பார். கமல், ராதிகா, மனோரமா கூட்டணியில் வரும் காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பி இருக்கும்.
மைக்கேல் மதன காமராஜன்: உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக வெளியானது தான் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்திற்கு 2k கிட்ஸ் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். கிரேசி மோகனின் எழுத்தில் இந்த படத்தின் அத்தனை காட்சிகளுமே வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். மனோரம்மா இதில் கங்கா பாய் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார்.
உன்னால் முடியும் தம்பி: கமலஹாசன், சீதா, மனோரமா, ஜெமினி கணேசன் ஆகியோரது நடிப்பில் இயக்குனர் இமயம் பாலச்சந்தர் இயக்கிய திரைப்படம் தான் உன்னால் முடியும் தம்பி. இந்த படத்தில் மனோரமா அங்கயர் கன்னி என்னும் கேரக்டரில் கமலின் அண்ணியாக நடித்திருப்பார். இதில் இவர்கள் இருவருக்குள்ளும் சென்டிமென்ட் காட்சிகளும் இருக்கும். காமெடி காட்சியில் மட்டும் கலக்கிய கமல் மனோரமா கூட்டணி சென்டிமென்ட் காட்சிகளிலும் கலங்க வைத்திருக்கும்.