தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படங்களை முதன்முதலில் எடுத்த இயக்குனர் என்றால் அது கே.எஸ் ரவிக்குமார் தான். தனது திரைப்படங்களின் மூலமாக பல என்டர்டைன்மென்ட் காட்சிகளையும் கதைக்கு மிகுந்த இயக்கத்தையும் கையாளுவதில் கே.எஸ் ரவிக்குமார் கைதேர்ந்தவர்.
அந்தவகையில் இவர் இயக்கிய பல திரைப்படங்களில் ஹீரோக்கள் 2 அல்லது 3க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்திருப்பர். மேலும் கம்மி பட்ஜெட்டிலும் கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்குவதில் கைதேர்ந்தவர். அப்படி குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பல கோடிகள் வரை வசூலை ஈட்டிய ஆறு திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.
நாட்டாமை: நடிகர் சரத்குமார், விஜயகுமார், மீனா, குஷ்பூ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படம் 1994ஆம் ஆண்டு ரிலீசானது. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்ற வசனம் இன்று வரை பல மீம்ஸுகளில் தெறிக்கவிட்டு தான் வருகிறது. கிராமத்து சாயலில் குடும்பக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் பட்ஜெட் 1.50 கோடி ஆகும். ஆனால் இத்திரைப்படம் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய நிலையில் கிட்டத்தட்ட 12 கோடி வரை வசூலை அள்ளிக் குவித்தது.
முத்து: நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. ஏ. ஆர் ரஹ்மான் இசையில் பட்டையை கிளப்பிய அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு இன்றளவும் விருப்பப் பாடல்களாக அமைந்துள்ளது. பணக்காரனின் பிள்ளை வேலைக்காரனாக வாழும் கதையை மையமாக வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருப்பார். 100 நாட்களுக்கும் மேலாக ஓடிய இத்திரைப்படத்தின் பட்ஜெட் 5 கோடி ஆகும். ஆனால் இத்திரைப்படம் வெளியாகி 30 கோடி வரை வசூலை அள்ளிக் குவித்தது.
தெனாலி : உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 2000 ஆண்டு வெளியான தெனாலி திரைப்படம் காமெடி கலந்த கமர்சியல் திரைப்படமாக வெற்றி பெற்றது. இத்திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட மூன்று தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் கிடைத்த நிலையில், இப்படத்தில் கமலஹாசனின் நடிப்பும் ஜெயராமனின் நடிப்பும் இன்றுவரை ரசிகர்களுக்கு விருப்பமானது. வெறும் ஒன்பது கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட 30 கோடி வரை அள்ளிக் குவித்தது
சரவணன்: நடிகர் சிம்பு,ஜோதிகா நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சரவணன் திரைப்படத்தில் சிம்புவின் தனிப்பட்ட வித்தியாசமான நடிப்பை இத்திரைப்படத்தில் காண்பித்து இருப்பார். வித்யாசாகர் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டடித்த நிலையில், குடும்ப கதையை மையமாக வைத்தும், காதலை மையமாக வைத்தும். இத்திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிக் இருப்பார் .வெறும் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வசூல் 21 கோடி வரை வசூலை எட்டியது.
தசாவதாரம்: உலகநாயகன் கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் திரைப்படத்தில் அசின் உள்ளிட்ட பலர் நடித்து இருப்பர். விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட வைரல் சிப்பால் எந்த அளவிற்கு மனிதர்களுக்கு பாதிப்பு என்பதை தெரிவிக்கும் வகையில் இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கும். மேலும் 2004ஆம் ஆண்டு வங்காளக் கடலில் உருவான சுனாமி காட்சியை போல தத்ரூபமாக இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் பல கிராபிக்ஸ் காட்சிகளுடன் காண்பித்து இருப்பார். 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட
இத்திரைப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட 120 கோடி வரை எட்டியது
வரலாறு: நடிகர் அஜித் 3 கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது. அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் அஜித்தின் நடிப்பு யதார்த்தமாக இருந்தாலும், இத்திரைப்படத்தில் பரதநாட்டிய கலைஞனாக அஜித்தின் நடிப்பு இன்றுவரை பலருக்கும் வியக்கத்தக்க வகையில் அமைந்தது. வெறும் 17 கோடியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வசூல் 55 கோடி வரை அள்ளிக் குவித்தது.