நடிகர்கள் சத்யராஜ் மற்றும் பிரபு இருவருமே 90ஸ் காலத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு இணையாக டாப்பில் இருந்த ஹீரோக்கள். விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு போன்றவர்கள் சமகாலத்து போட்டியாளர்கள் என்றே சொல்லலாம். இதில் சத்யராஜ் மற்றும் பிரபு ரஜினிகாந்த் மற்றும் கமல் படங்களில் இரண்டாவது ஹீரோக்களாக நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் ஹீரோக்களாக இருந்தபோது சக கதாநாயகர்களாக இருந்த மோகன், ராமராஜன், கார்த்திக் போன்றோர்கள் இப்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. ஆனால் சத்யராஜும், பிரபுவும் இப்போது கூட படங்களை தங்கள் கைவசம் வைத்து கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் காலத்தில் ஹீரோவாக இருந்த ரஜினிகாந்தும், கமலஹாசனும் இன்றளவும் கூட ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். ஆனால் பிரபுவும், சத்யராஜும் இப்போது கதாநாயகர்களாக நடிப்பது இல்லை. ஆனால் இன்றுவரை தமிழ் மட்டுமில்லாமல் வெளி மொழி படங்களும் சேர்த்து வருடத்திற்கு 10 படங்கள் நடித்து தள்ளி விடுகின்றனர் .
இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இவர்கள் எடுத்த முடிவுதான். கொஞ்ச காலம் இவர்கள் ஹீரோவாக நடித்து பார்த்து படங்கள் வெற்றி பெறாததால் ஹீரோ என்னும் எண்ணத்தை கைவிட்டு விட்டார்கள். ஹீரோவாக நடித்து படங்கள் வெற்றி பெறுவதை விட, வெற்றிப்படங்களில் முக்கியமான கேரக்டரில் நடிப்பது என்ற முடிவை எடுத்து விட்டார்கள்.
இப்படி ஒரு முடிவை கையில் எடுத்து நடிப்பதால் தான் இவர்களால் இன்றுவரை சினிமாவில் நிலையாக இருக்க முடிகிறது. காமெடி, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி கொள்வதால் தான் இவர்கள் வெற்றி பெற்று கொண்டிருக்கிறார்கள். இது இவர்களுடைய இரண்டாவது இன்னிங்க்ஸ் என்று கூட சொல்லலாம்.
இவர்கள் ஹீரோக்களாக நடித்து வெற்றி பெற்றதை விட இரண்டாவது இன்னிங்சில் பயங்கரமாக கலக்கி வருகிறார்கள். பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் அவருடைய சினிமா கேரியரில் மிக முக்கியமானது. அதே போலத்தான் நடிகர் பிரபுவும். அவர் நடித்த அயன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது.