நடிகர் சத்யராஜ் தன்னுடைய சினிமா கேரியரில் ஆரம்ப காலங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து, பின்னர் வில்லனாக நிறைய படங்கள் நடித்து பின்பு ஹீரோவாக ஆனார். கடலோர கவிதைகள், அமைதிப்படை, வேதம் புதிது, விக்ரம், மிஸ்டர் பாரத், காக்கி சட்டை போன்ற படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சத்யராஜ் தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்சில் இன்னும் கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சத்யராஜ் கௌரவ வேடத்தில் அசத்திய 5 படங்கள்,
விருமாண்டி சந்தனம் (நண்பன்): த்ரீ இடியட்ஸ் என்னும் ஹிந்தி படத்தின் ரிமேக் தான் நண்பன். இந்த படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்திருக்கின்றனர். இளைஞர்களை சுற்றி நடக்கும் கதையில் கல்லூரி முதல்வர் விருமாண்டி சந்தனமாக சத்யராஜ் நடித்திருப்பார். இவர்களை மாணவர்கள் வைரஸ் என்று அழைப்பார்கள். கண்டிப்பான கல்லூரி முதல்வர் கேரக்டரை தனக்கே உரித்தான நக்கலுடன் நடித்திருப்பார்.
சிவனாண்டி (வருத்தப்படாத வாலிபர் சங்கம்): சத்யராஜ்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் வந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. ரொம்ப சீரியஸாக நடித்துக் கொண்டிருந்த சத்யராஜை மீண்டும் அமைதிப்படை, மாமன் மகன் படங்களில் பார்த்தது போல் இருந்தது.
வெற்றிச்செல்வன் (இசை): எஸ் ஜெ சூர்யா இயக்கி நடித்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய பிரபல இசையமைப்பாளரான சத்யராஜ் , தன்னிடம் உதவியாளராக இருந்த எஸ் ஜெ சூர்யாவுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்த பின் அவரை கீழே இறக்க எப்படி வில்லத்தனமாக செயல்படுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.
கட்டப்பா (பாகுபலி): பாகுபலி 2015ல் வெளியான பான் இந்தியா படம் ஆகும். இன்றைய தலைமுறைகளில் பலருக்கு சத்யராஜை கட்டப்பாவாக தான் தெரியும். பாகுபலியின் இரண்டாம் பாக மொத்த கதையையும் தாங்கி நின்ற கதாபாத்திரம் கட்டப்பா. சத்யராஜ் இந்த படத்தில் சண்டை காட்சிகளிலும் அசத்தி இருப்பார்.
முருகேசன் (கனா): சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் எழுதி இயக்கிய திரைப்படம் கனா. கிரிக்கெட் மற்றும் விவசாயம் சார்ந்த கதை. விவசாயியான முருகேசன் கிரிக்கெட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன்னுடைய மகளின் கிரிக்கெட் கனவை நிறைவேற்ற போராடும் தந்தையாக சத்யராஜ் இந்த படத்தில் நடித்திருப்பார்.